கற்பாறைக்குள் கருணை

Vinkmag ad

கற்பாறைக்குள் கருணை
———————————-

கற்பாறையாக இருந்தாலும் அதில்
கசிந்துருகும் நீர்சுனை இருக்கும்
கடின மிருக மனமாயினும் அதிலும்
கருணை என்ற குணம் இருக்கும்

இரக்கம் இதமாய் சுரப்பதற்கு
இதயம் மிருதுவானால் போதும்
துடிப்போடு துரத்தியதன் நோக்கம்
நொடிப் பொழுதில் மாறிப் போகும்

அன்பே அனைத்தின் பிரதானம் அது
அகிலத்தின் அடிப்படை அச்சாரம்
தன்னினமே தாக்க வந்தாலும் அதை
தடுத்து தர்மம் நிலைக்கச் செய்யும்

மனுதர்மம் என்று வந்து விட்டால்
மனிதனும் மிருகமும் ஒன்றுதான்
மாற்றங்கள் அதில் நிகழ்கிறதென்றால்
மனங்கள் இறுகிப் போனதால் தான்

பந்தபாசங்கள் உயிர்களிடையே
பட்டா போட்டு விற்கப்படுவதல்ல
உள்ளத்தில் ஊறும் உணர்வுகள்
உலகம் சுழல அதுவே அச்சாணிகள்

மு. முகமது யூசுப். உடன்குடி

News

Read Previous

ஆதார் கார்டு ஜெராக்ஸ்

Read Next

தாய்ப்பாலின் சிறப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *