கொலஸ்ட்ரால்

Vinkmag ad
கொலஸ்ட்ரால் என்பது, நீரில் கரையாத கொழகொழப்பான கரிம வேதிக் கூட்டுப்பொருள் (Organic Chemical Compound) ஆகும். இது லிபிட் (Lipid) வகையைச் சேர்ந்த கொழுப்புப் பொருளாகும். நமக்குத் தேவையான 80 சதவிகிதக் கொலஸ்ட்ராலை (Endogenus cholesterol) நமது கல்லீரலே உற்பத்தி செய்கிறது. மீதி 20 சதவிகிதக் கொலஸ்ட்ராலை (Exogenus cholesterol) நாம் உண்ணும் அசைவை உணவு மற்றும் கொழுப்புள்ள பால் பொருட்களிலிருந்து கிடைக்கிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. வயிற்றில் செரிமானமான உணவுக் கூழிலிருந்து, குடலினால் உறிஞ்சப்பட்ட. சத்துக்கள் இரத்தத்தில் கலக்கின்றன. இவை கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுச் சேமித்து வைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
உயிரணுக்களின் மேலுறையையும், நரம்புகளின் மின் சமிக்ஞைகளுக்குத் தேவையான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் (Neurotransmitter) என்னும் மின் தூண்டல் கடத்திகளையும் உற்பத்தி செய்வதற்கும், கல்லீரலிலிருந்து பித்த நீர் சுரக்கவும் கொலஸ்ட்ரால் உதவுகிறது. A,D,E,K ஆகிய கொழுப்பில் கரையும் வைட்டமின்களை இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
இயல்பான நிலையில் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் 160-க்குள் இருக்கலாம். இந்த அளவைத் தாண்டினால் ‘அதிகம்’ எனலாம். இந்த வரையறைக்கு அதிகமான LDL  இதய நோய் உண்டாக்கும். இரத்தக் குழாய் உட்சுவர்களில் கொலஸ்ட்ரால் படிகங்களாக (Cholesterol plaque) படிவதால் தடைப்படும் இரத்த ஓட்ட நோய்க்கு Atherosclerosis (தமனித் தடிப்பு நோய்) என்று பெயர். அளவுக்கு அதிகமான HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் LDL அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது.

News

Read Previous

ஐக்கூ சார்ந்த கவிதை

Read Next

அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published.