கால் வலிக்குக் காரணம் என்ன? விரைவில் குணப்படுத்துவது எப்படி?

Vinkmag ad

கால் வலி திடீரென அல்லது படிப்­ப­டி­யாக நேரக்­கூடும். இளம் வய­தி­னர், நடுத்­தர வய­தி­னர் ஆகி­யோ­ருக்கு விளை­யாட்­டின்­போது ஏற்­பட்ட காயத்­திற்­குப் பிறகு கால் வலி ஏற்­ப­ட­லாம். வய­தா­ன­வர்­களுக்­குப் பெரும்பா­லும் மூட்­டு­கள் தேய்ந்து போவதால் அல்லது முது­கெ­லும்பு நரம்­பில் ஏற்­பட்ட காயம் அல்லது நோயால் படிப்­ப­டி­யாக கால் வலி உண்டா­க­லாம்.

 

காயத்­திற்­குப் பிறகு ஏற்­படும் கால் வலிக்­கான பொதுவான கார­ணங்களில் தசை இறுக்­கம், தசைநார் கிழிந்த­தால் இடுப்பு, முழங்கால் அல்லது கணுக்­கா­லில் பாதிப்பு ஆகியவை உள்­ள­டங்­கும். கால் முழு­வ­தும் பரவும் வலிக்கு கீழ் முதுகில் அல்லது முது­கெ­லும்­பில் இருந்து வரும் நரம்பு வலியும் கார­ண­மாக இருக்­கக்­கூடும்.

முது­கெ­லும்­பில் ஏற்­படும் தேய்வு அல்லது காயம் இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம். காயத்­திற்­கான கார­ணத்தைக் கண்ட­றி­வது முக்­கி­யம் என்­கிறார் அமெ­ரிக்­கா­வில் பயிற்சி பெற்று சிங்கப்­பூரில் மருத்­து­வச் சேவை வழங்­கும் முது­கெ­லும்பு மற்றும் நரம்­பி­யல் வல்­லு­நர் டாக்டர் பிரேம் பிள்ளை.

News

Read Previous

விஷம் குடித்து முதியவர் சாவு

Read Next

முஸ்லிம் லீகின் கொள்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *