முஸ்லிம் லீகின் கொள்கை!

Vinkmag ad

–மாநில முஸ்லிம் லீகின் சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் ஜிவா கிரிதரன் வினாவுக்கு விடை உண்டா?

கண்ணீயத்திற்குரிய காயிதேமில்லத் ( ர‌ஹ் ) வகுத்துத் தந்த
முஸ்லிம் லீகின் கொள்கையைத்தான், தேசியச் செயலாளர்
இ.டி.முஹம்மத் பஷீர் எம்.பி தொகுத்துச் சொல்லியிருக்கிறார்!

இதோ கண்ணீயத்திற்குரிய காயிதேமில்லத் ( ரஹ்) கூறும்

முஸ்லிம் லீகின் கொள்கை!

பாரதத்தின் எந்த மொழியைஆதிக்கம் பெறச்செய்தாலும் நாட்டில எதிர்ப்பு உருவாகும். ஒற்றுமை குலையும் ஆங்கிலமோ இந் நாட்டில் வேரூன்றி நிற்கிறது.எனவே இருக்கும் ஆங்கிலமே தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வழி செய்யவேண்டும்.

இந்தி மொழி மீது தனிப்பட்ட முறையில் இம்மியளவும் வெறுப் பில்லை அதை மக்களிடையே கட்டாயப்படுததி திணிப்பதையே முஸ்லிம் லீக் எதிர்க்கிறது. .

தி.மு.க நடத்தும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முஸ்லிம் லீக் கலந்து கொள்ளுமா ? என்று கேட்கிறார்கள்.

முஸ்லிம் லீக் தி.மு.கவைப் போன்ற அரசியல் கட்சியல்ல. தி.மு.க. தமிழகத் தில் மட்டும் இயங்குகிறது. அது தென்னகத்திற்காக மட்டும் பேசுகிறது .அதனுடைய கொள்கைகள் லட்சியங்கள் யாவும் வேங்கட மலையை எல்லையாகக் கொண்ட தென் பரப்புக்குள் ளாகவே அமைந்துள்ளது.முஸ்லிம் லீக் அப்படியல்ல பாரதம் முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநித்துவ சபையாக எல்லா மொழி பேசும் மக்களுக்கும் அது பிரதிநித்துவ ஸ்தாபனமாக இருப்பதால் அகில பாரதத்தை கருத்தில் கொண்டு சபை கூடி உரிய நேரத்தில் முடிவெடுக்கும்.

[1963-ம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க இந்தி எதிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியது–நன்றி மறுமலர்ச்சி 1963- அகடேபர்11]
நூல்: கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்.வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்-சென்னை.

News

Read Previous

கால் வலிக்குக் காரணம் என்ன? விரைவில் குணப்படுத்துவது எப்படி?

Read Next

ஜனவரி 25முதல் பிப்.2 வரை ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா

Leave a Reply

Your email address will not be published.