இஞ்சியின் மருத்துவ நன்மைகள்

Vinkmag ad

இஞ்சியை பற்றி இந்தியர்களுக்கு அதிகம் சொல்லவேண்டியது இல்லை. நம் சமையல் இஞ்சி இல்லாமல் நடப்பது இல்லை. ஆனால் அறிவியல் உலகம் இஞ்சியின் நன்மைகளை இப்போதுதான் அறிந்துவருகிறது.

இஞ்சி காஸ் பிரச்சனைகளுக்கு சிறப்பான நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள கார்மினேடிவ் வயிற்றில் உள்ள காஸை அகற்றும். இஞ்சியில் உள்ள ஸ்பாஸோமைட்டிக் ஜீரணகுழாயை ஆசுவாசப்படுத்தி, ரிலாக்ஸ் செய்யும்.

கர்ப்பிணிகள் சிலருக்கு இடைவிடாத தலைசுற்றல், வாந்தி வரும். சிலர் இதனால் மருத்துவமனையில் அட்மிட் ஆவதும் உண்டு. மருத்துவர்கள் இதற்கு பரிந்துரைக்கும் ஆண்டி-வாமிட்டிங் மருந்துகள் வயிற்றில் உள்ள கருவுக்கு பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. ஆனால் இஞ்சியில் இந்த சைடு எஃபெக்ட் எதுவும் கிடையாது. இஞ்சியில் சைடு எஃபெக்டு எதுவும் கிடையாது என நம் பாட்டிகளுக்கு அனுபவத்தால் தெரியும். ஆனால் மெனகெட்டு இதை தனியாக ஒரு ஆய்வாக நடத்தி 675 கர்ப்பிணிகளை வைத்து பரிசோதித்து இஞ்சியால் கருவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை எனவும் அறிக்கை கொடுத்துளார்கள்  சரி…சக்கரத்தை மறுபடி கண்டுபிடிக்கவேண்டும் என முடிவெடுத்தால் அதை தடுக்க நாம் யார்?

கடும் ஆர்த்ரைட்டிஸ் வலியால் அவதிபட்டவர்களை இரு பிரிவாக பிரித்து ஒரு பிரிவுக்கு இஞ்சியும் இன்னொரு பிரிவுக்கு எதுவும் கொடுக்காமல் சோதனை நடத்தியதில் இஞ்சி சாப்பிட்ட குழுவுக்கு வலியும், முடமும் கடுமையாக குறைந்து இருந்தன. எந்த அளவு? 100% என்பது உச்சகட்ட வலி, 100% என்பது உச்சகட்ட முடம் என வைத்துக்கொண்டால் ஆய்வு துவங்குமுன் இஞ்சி குழுவுக்கு சுமார் 75% வலியும், முடமும் இருந்தன. ஆறுமாதத்தில் இது 41% ஆக குறைந்தது.

அதுபோக முட்டிகளில் இருந்த வீக்கமும் கணிசமாக குறைந்தது. 43.25 செமி அளவாக அளக்கபட்ட சராசரி முட்டியின் அளவு மூன்றாவது மாதத்தில் 39.36 செமி ஆக குறைந்தது. இந்த அளவு முன்னேற்றத்தை ஆறு மாதத்தில் அல்ல, ஆறு வருடத்தில் அடைய பல கெமிக்கல்களை விழுங்கி, பல சைடு எஃபெக்ட்டுகளை சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. வேறு வழியில்லையெனில் ஆர்த்ரைடிசுக்கு ஊசிமூலம் தங்கத்தையே செலுத்துவதும் உண்டு!!!!!!!! தங்கத்தை கரைத்து விழுங்கினாலும் சைடு எஃபெக்டு உண்டு (கிட்னி பாதிப்பு). ரெண்டு ரூபாய் இஞ்சி வாங்கி சாப்பிட்டால் இந்த தொல்லை எதுவும் கிடையாது.

இஞ்சி ஆர்த்ரைட்டிஸ் வலியை மட்டுமல்ல…இன்ஃப்ளமேஷனால்(உள்புண்) வரும் எண்ணற்ற பாதிப்புக்களையும் குணப்படுத்தும். இஞ்சியில் உள்ல ஜிஞ்சரால் உடலில் நைட்ரிக் அமிலம் சுரப்பதை மட்டுபடுத்துகிறது. அதுபோக இன்ஃப்ளமேஷனை ஏற்படுத்தும் பல வேதியியல் பொருட்களை (உதா: சைடோகின், கெமோகின்) உடல் உற்பத்தி செய்வதை தடுக்கிறது.

கோலோரெக்டல் கான்சரின் எதிரி

ஆய்வு ஒன்றில் எலிகளை இருபிரிவாக பிரித்தார்கள். இரன்டு எலிகளுக்கும் ஊசிமூலம் கோலோரெக்டல் கான்சர் செல்கள் செலுத்தப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு ஜிஞ்சரால் தொடர்ந்து வழங்கபட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு ஜிஞ்சரால் வழங்கபடவில்லை.

15 நாட்களில் ஜிஞ்சரால் உட்கொள்ளாத எலிகளில் 13 எலிகளுக்கு டியூமர்கள் தோன்றின. இஞ்சி உட்கொண்ட எலிகளில் 4க்கு மட்டுமே டியூமர்கள் தோன்றின. அதிலும் அவற்றின் டியூமர் கட்டிகளின் அளவுகள் சிறிதாக இருந்தன….38 நாள் கழித்தும் ஜிஞ்சரால் உட்கொன்ட எலிகளில் ஒரு எலிக்கு டியூமர் தோன்றவில்லை. டியூமர் கட்டிகளின் அளவு ஒரு குறிபீட்ட அளவை அடைந்தவுடன் அந்த எலிகளை கொல்வதாக முடிவாகி இருந்தது. 49வது நாளில் ஜிஞ்சர் உட்கொள்ளாத எலிகள் அனைத்தின் டியூமரும் அந்த குறிப்பிட்ட அளவை அடைந்ததால் கொல்லபட்டுவிட்டன. ஜிஞ்சர் உட்கொண்ட எலிகளில் 12ன் டியூமர் அளவு 49வது நாளில் பாதி அளவே இருந்தன.

இந்த ஆய்வுமுடிவு மனிதர்களுக்கு பொருந்தும் என வைத்துக்கொண்டால் கோலோரெக்டல் கான்சரால் பாதிக்கப்டவிருக்கும் அனைவரும் இஞ்சி உட்கொண்டால் அவர்களில் மூன்றில் இருபங்கு மனிதர்கள் கான்சர் வராமல் தப்புவார்கள். 90% பேரது ஆயுள் அதிகரிக்கும். அனைவருக்கும் கான்சரின் வீரியம் குறையும்.

கோலோரெக்டல் கான்சர் கிருமிகள் மீதான இஞ்சியின் விளைவுகள் கீமோதெரபியின் விளைவுக்கு அருகே வந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பபை கான்சரையும் இஞ்சி எதிர்த்து போரிடுவதாக கண்டறியபட்டுள்ளது

இஞ்சியை சமைத்தும் உண்ணலாம். இஞ்சி டீ வைத்தும் பருகலாம். இஞ்சியை அரைத்து/பொடியாக்கி உணவுக்கு மேலே தூவி உண்பதும் சிறந்தது.

செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)
http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

News

Read Previous

சிறகு

Read Next

அத்திக்காய் காய் காய்..

Leave a Reply

Your email address will not be published.