அத்திக்காய் காய் காய்..

Vinkmag ad

 

கண்ணதாசன் என்கிற திரையுலகக் கம்பன் – தன் முன்னோர்கள் – தமிழ்ச் சான்றோர்கள் – புலவர் பெருமக்கள்தம் படைப்புகளில் ஆழ்ந்து உணர்ந்து,அப்பாடல்களின் பொருளுணர்ந்துபுளகாங்கிதம் அடைந்தது மட்டுமின்றிபலரும் புரியும்வண்ணம் அச் செய்திகளை உள்வாங்கிதமக்கே உரிய பாணியில் திரைப்பாடல்களில் வழங்கியிருக்கும் பல பாடல்கள் கவிஞரின் திறமைக்கு சான்று பகர்கின்றன.

 

காய் என்கிற சொல்லை அடுக்கடுக்காய்வைத்து பல்வேறு காய்களைச் சுட்டிக்காட்டி தன் அத்தை மகள் சமைத்த சமையலைப் பாடும் காளமேகப் புலவரின் பாடல் ஒன்று..

 

கரிக்காய் பொரித்தாள்  கன்னிக்காயை தீர்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்என்று காய் அடுக்கு நான்கு முறை கூறப்பட்டு நயமுற அமைக்கப்பட்டுள்ளது.

 

இதில் வியந்த கண்ணதாசன், 25முறை காய் என்னும் சொல்லை வைத்து  விளையாடுகிறார். அத்திக்காய் காய் காய் காய் ..ஆலங்காய் வெண்ணிலவே.. என்கிற பாடலில் கேட்பவர் நெஞ்சம் மகிழும்படி பாடுகிறார்..

 

காளமேகப் புலவரின் இருபொருள் நயங்களில் மயங்கி இலை மறை காயாகப் பலமுறை இவரும் வார்த்தைகளை வடித்தெடுத்துத் தருகிறார்.

 

பலே பாண்டியா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாட்டுஎழுதப்பட்ட போது இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் என்னய்யாகொத்தவால் சாவடியையே பாடலில்கொண்டு வந்திருக்கீரே.. என்று சொல்ல.. கண்ணதாசன் அவரிடம் எவ்வளவோ பாடல்கள் நீங்க கேட்கிறமாதிரி எழுதித் தருகிறேன்.. இதுமாதிரி ஒருசில பாடல்கள் எனக்காக இருக்கட்டும் என்று சொல்லி இடம்பிடித்த பாட்டு இது.. 

 

அந்த திக்காய் காய்.. என்று வெண்ணிலவை கவியரசர் இருபொருள்பட .. ஒவ்வொரு வரியிலும் வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கிறார்.  

 

தமிழின் அழகு  கொட்டிக்கிடக்கும் திரைப்பாடலைக் காணுங்கள்! பொருளின் சுவையும் அறிந்தபடி இசையில் கொஞ்சம் மயங்குங்கள்!!

 

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
(கன்னிக்காய்..)
மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
(இரவுக்காய்..)
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
(ஏலக்காய்..)
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

 

http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8

 

காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

சென்னை 600 075.

தற்போது – அபுதாபி  (அமீரகம்)

00971 50 2519693

kaviri2012@gmail.com

 

Website: thamizhnadhi.com

 

 

அத்திக்காய் பாடலுக்கு இத்திக்காய் சிறு விளக்கம்.

 

 

கண்ணதாசனின் கற்பனை வளம் தமிழின் அழகு ஆளுமை எல்லாம்  இப்பாடலில்  தெரியவருகிறது…

இரண்டு தம்பதிகள் நிலவை நோக்கிப்பாடுவதான பாடலிது

முதல் ஜோடி சொல்வது  ஆண்…முதல் வரி நிலாவுக்கு

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணீலவே

அத்திக்காய் ஆலங்காய் போல தன் வெண்ணிலா முகக்காதலி கோபத்தில் சிவந்திருக்கிறாள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்

அந்த திசை நோக்கி ஒளிவீசு நிலவே (ஏனெனில்
இந்தப் பெண்ணுக்கு நீ என்னைப்பார்ப்பதாய் லேசாய் பொறாமை!)

ஆல் போல பலகாலமாய் வானில்வாழும் வெண்ணிலவே  (இப்படியும் சொல்லலாம்)

2ஆம் வரி தன்னருகில் நிற்பவளுக்கு

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இந்த திசையில் கடிந்துகொள்ளாதே பெண்ணே என் உயிரே நீதானே?

பெண்—

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்

இந்தப் பெண் உனீது ஆசைகொண்ட காதல்கொண்ட பாவை இப்போது கோபமாக
இருக்கிறாள் (பாகற்காய் கசப்பினை கோபமாகக்கொள்ளலாம்)

அங்கே

காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
அங்கே திட்டு அவரைத் திட்டு மங்கையான எந்தன் மன்னனை(கோ) திட்டு
ஆண்..
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
மாதுளம்பழம் வெளியே காய்போல முரடாக இருக்கும்(உள்ளே பழம் முத்துக்களாய்)
பெண்ணே(மாது) உன் உள்ளம் காய் ஆனாலும் என் உள்ளம் காய் ஆகுமோ?
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
இரவு காய் ஆனது உறவு காய் ஆனது அதற்கு ஏங்கும் இந்த ஏழையை நீ திட்டு

இரவுக்காக உறவுக்காக ஏங்குகின்ற இந்த ஏழைக்காக

நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
நீயும் திட்டு தினமும் திட்டு(எல்லாம்) நேர்ல நிற்கிற இவளால்
நீயும் ஒளிவீசு நிதமும் ஒளிவீசு நேரில் நிற்கும் இவள் மீது ஒளிவீசு
பெண்-
-உறவும் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
கோபத்துல உறவு இப்போ காய் மாதிரி இருந்தாலும் என் பருவம் கனிந்ததல்லவா
அதுஇவரைக்கடிந்துகொள்ள அனுமதிக்குமா?

என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ?
என்னை நீ திட்டாதே நீயும் என்மாதிரி பெணல்லவா?
(நிலா சூரியனிடமிருந்து ஒளி பெறுவதுபோல் பெண் தன் கணவனின் மதிப்பினால்
ஒளிவீசுகிறாள் எனும் உள் அர்த்தம்!)
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு
(இதில்
இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)
ஜாதிக்காய் கெட்டது போல் தனிமை இனபம்கனியக்காய்
ஜாதிகளை ஒழித்ததுபோல் எங்களிடையே உள்ள பிரசசினைதீர்த்து தனிமையின் இனபம் கனிய
ஒளிவீசு

(ஜாதிக்காய் கெட்டாலும் மணம்வீசும் அந்த மணம் போல தனிமையில் இன்பம்
மணக்கட்டும்  என இருக்கலாம்)

இரண்டாவது ஜோடி
ஆண்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூது  வழங்காய் வெண்ணீலா
இவ்ளொ நேரம் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா போய் அவகிட்ட தூது சொல்லிவிளக்கு
சொன்னதெல்லாம் விளாங்காய் மாதிரி மேல் ஓடு கடினமானாலும் உள்ளே
கனிவானதுதான் (தூதுவழங்காய் ஏதோ மருத்துவ செடி?)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
உள்ளம் என்ன காரமான மிள்காயா அதான் ஒவ்வொருபேச்சும் உரைப்பா?(காரமா)

உள்ளம் எல்லாம் இளகாதா உன் ஒவ்வொரு பேச்சும் உரைநடைமாதீரி இருக்கிறதே(ஐஸ் ஐஸ்!)
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ  சிரித்தாயே
பெண் சிரிப்பு பிளந்த வெள்ளரி நிலவும் அப்படியாம்

வெள்ளரிக்காய் பிளந்தது போல் பெண்ணிலவே நீ சிரித்தாயோ ..

 

ஆம்.   வெள்ளரிக்காய் அறுத்துப் பார்க்கும்போது .. சீராக .. அதன் விதைகள் தெரியும்.

 

பெண்ணின் பற்கள் அப்படி முத்துச்சரம் போல் காட்சியளிக்கிறது என்பதற்கான உவமைதான் இது.

 

கோதையெனைக்காயாதே கொற்றவரங்காய் வெண்ணீலா
கோதை என்னைதிட்டாதே  கொற்றவர் (என் மன்னர்)அங்கே அவரைத்திட்டு வெண்ணிலா

கோதை என்மேல ஒளிவீசாதே நீ மெலிந்து கொத்தவரங்காய் ஆன வெண்ணீலா(கிண்டல்)

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
எங்க  இருவரையும் திட்டாதே போய் தனிமையில் போய் ஏங்கிக்கொள்
இருவர் மேலயும் ஒளிவீசவேண்டாம் தனிமையிலே போய் ஒளிவீசிக்கொள்

 
(அதாவது ஜோடிகள் சமாதானம் ஆகிவிட்டார்கள் நிலாவுக்கு டாட்டா
சொல்லிவிட்டார்கள்)

 

News

Read Previous

இஞ்சியின் மருத்துவ நன்மைகள்

Read Next

கிடாத்திருக்கைக்கு அரசு பஸ் “கட்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *