பனஞ்சர்க்கரையைப் பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

Vinkmag ad

வெள்ளைச்சர்க்கரைக்குப் பதிலாக பனஞ்சர்க்கரையைப் பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!
ஆரம்ப காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்புச் சர்க்கரைதான் பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்தக் காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

#கல்லீரல்_சுத்திகரிப்பு
#வெள்ளைச்சர்க்கரை:

ஃபிரக்டோஸ் அளவு வெள்ளைச் சர்க்கரையில் அதிகம். இது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்குக் காரணியாக இருக்கிறது. இதனால் கல்லீரல் செயல்திறன் பாதிப்பு அதிகரிக்கிறது.

#பனஞ்சர்க்கரை:

பனஞ்சர்க்கரை உங்கள் கல்லீரலிலுள்ள கொழுப்பை மட்டுமின்றி உடலில் இருக்கும் நச்சுக்களையும் போக்கி சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது.

#செரிமானம்
#வெள்ளைச்சர்க்கரை:

கல்லீரலில் இது தாக்கம் ஏற்படுத்துவதால் செரிமான மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால் செரிமானக் கோளாறுகள், மலம் கழித்தல் பிரச்சனைகள் உண்டாகவும் வெள்ளைச்சர்க்கரை ஒரு காரணியாகத் திகழ்கிறது.

#பனஞ்சர்க்கரை குடலியக்கத்தை ஊக்குவித்துச் செரிமானத்தைச் சரி செய்ய உதவுகிறது.

#கொழுப்பு
#வெள்ளைச்சர்க்கரை:

வெள்ளைச் சர்க்கரையில் கலோரிகள் அதிகம்; நீங்கள் பருகும் அனைத்து குளிர் பானங்களிலும் செயற்கைச் சர்க்கரையின் அளவு அதிகம். இதனால் தான் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்புகள் அதிகமாக உண்டாகின்றன.

#பனஞ்சர்க்கரையில் கலோரிகள் குறைவு, மற்றும் இது இயற்கைச் சர்க்கரை. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட இதை உட்கொள்ளலாம்.

#கொலஸ்ட்ரால்
#வெள்ளைச்சர்க்கரை

வெள்ளைச்சர்க்கரை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நலனில் சீர்கேடு உண்டாக்குகிறது. இதனால், இதய நோய்கள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கிறது.

#பனஞ்சர்க்கரை இயற்கையானது. இதில் கலோரிகள் குறைவு. மற்றும் இதிலிருக்கும் இரும்புச் சத்து உடல் நலத்தை ஊக்குவிக்கிறது. இதனால், உடல் மற்றும் உடல் பாகங்கள் வலுவடைகின்றன.

#நோய்_எதிர்ப்பு
#பனஞ்சர்க்கரையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் ஜின்க், செலினியம் போன்ற மினரல்கள் உடலில் ஏற்படும் சேதங்களைச் சரி செய்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன.

#இரத்தச்சர்க்கரை அளவு (Diabetics)
#வெள்ளைச்சர்க்கரையை உணவில் பயன்படுத்துவதால் இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும், இது கல்லீரலையும் பாதிப்பதால் உடலில் இன்சுலின் சமநிலையில் தாக்கம் ஏற்படுத்தி நீரிழிவு நோய்உண்டாக இது முக்கிய காரணியாக இருக்கிறது.

#பெண்கள்_மாதவிடாய்க் காலத்தில் அதிக வலி அல்லது பிடிப்புகள் ஏற்படும். பெண்கள் உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக
பனஞ் சர்க்கரையைப் பயன்படுத்துங்கள். இது எண்டோர்பின் எனும் ஹார்மோனை ஊக்குவித்து வலியைக் குறைக்க உதவுகிறது.

#பனஞ்சர்க்கரை_நன்மைகள்
உடலில் நச்சுக்கள் அதிகரித்து சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டால் சுடு நீரில் பனஞ்சர்க்கரையைச் சேர்த்துக் குடித்து வந்தால் போதுமானது. இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டுள்ளதாகும்.

News

Read Previous

காக்கிச் சட்டை

Read Next

அன்றே கொல்வான்

Leave a Reply

Your email address will not be published.