தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..

Vinkmag ad

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..

 

படிப்பினையே என்கிற வரலாற்று வெற்றி முழக்கத்திற்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளால் நிறைந்த அவரது வாழ்க்கை முழுவதும் தோல்விகளும் பாதிப்புகளுமே அவரை அதிகமாக வரவேற்றிருக்கின்றன. நஷ்டம் ஏற்படும் போதெல்லாம், “பின்னடைவுகளில் இருந்து மீள ஒரு புது வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே” என்று நம்பிக்கை வார்த்தைகளோடு உலகெல்லாம் உற்சாக விதைகளைத் தூவியிருக்கிறார் எடிசன்.

1914 ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட, நண்பர்கள் எல்லாம்வழக்கமான சோக கீதங்களைப் பாட, எடிசன் சொன்னாராம், ” தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்! ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்து விட்டேன் போல..இந்தத் தோல்வி எனக்கு எவ்வளவு பெரிய படிப்பினை! ” என்று பூரித்துப் போனாராம்.

தனது 81- வது வயதில் மரணமடையும் வரை 1093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்கு, தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத அவரது இந்த மனப்பான்மையே காரணம்.

News

Read Previous

முதிர்ச்சி -சுழற்சி

Read Next

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்…..!

Leave a Reply

Your email address will not be published.