காலம் மாறிப்போச்சு

Vinkmag ad

காலம் மாறிப்போச்சு:

அண்டை வீட்டாரோடு…
அரட்டை அடித்து மகிழ்ந்தது…
அந்தக்காலம்…

அண்டை வீட்டாரை…
முகநூலில் யாரென விசாரிப்பது…
இந்தக்காலம்…

ஒருவர் ஊதியத்தில்…
ஒன்பது பேரை வளர்த்தது…
அந்தக்காலம்…

இருவர் ஊதியத்தில்…
ஒருத்தரை வளர்க்க திண்டாடுவது…
இந்தக்காலம்…

நடந்தும் மிதிவண்டி ஓட்டியும்…
தொப்பையையே காண முடியாதது…
அந்தக்காலம்…

பைக் காருடன் சுற்றிவிட்டு…
தொப்பையை குறைக்க நடப்பதுவும்…
நின்றயிடத்திலே மிதிவண்டி ஓட்டுவதுவும்…
இந்தக்காலம்…

வீட்டைச் சுற்றி…
இயற்கைத் தோட்டம் அமைத்தது…
அந்தக்காலம்…

வீட்டுக்குள்ளே வாடி வதங்காத…
செயற்கைச் செடியை வைத்திருப்பது…
இந்தக்காலம்…

அன்னை மடியில் அமர்ந்து…
உணவு உண்டது…
அந்தக்காலம்…

வேலைக்கார ஆயா மடியில்…
அமர்ந்து உண்ணுவது…
இந்தக்காலம்…

தாய்ப்பாலுடன் தாய்மொழியை…
தங்கமாய் ஊட்டியது…
அந்தக்காலம்…

புட்டிப்பாலுடன் புதுமொழியை…
புதுமையென ஊட்டுவது…
இந்தக்காலம்…

பெற்றோரையே தம்முடன் வைத்து…
போற்றி பாதுகாத்து வளர்த்தது…
அந்தக்காலம்…

தாம் பெற்ற பிள்ளையையே…
கற்பதற்கெனக் கூறி…
விடுதியிலே விடுவது…
இந்தக்காலம்…

கணவன் மனைவி மக்கள்…
ஒன்றாய் அமர்ந்து…
குதூகளித்து மகிழ்ந்தது…
அந்தக்காலம்…

கணவன் மனைவி மக்கள்…
தனித்தனியே அமர்ந்து…
கைபேசியை நோண்டுவது…
இந்தக்காலம்…

சுவையான ஆரோக்ய உணவை…
வீட்டிலே அன்போடு சமைத்து…
அன்போடு பகிர்ந்து உண்டது…
அந்தக்காலம்…

சுவையான ஆரோக்யமற்ற உணவை…
ஹோட்டலுக்கு குடும்பத்தோடு சென்று…
உண்ணும் போது செல்பியெடுத்து…
அனைவருக்கும் அனுப்பி மகிழ்வது…
இந்தக்காலம்….

பாட்டி வைத்தியத்தால்…
பறந்தோடியன பல நோய்கள்…
அந்தக்காலத்தில்…

படித்த மருத்துவரால்…
பறந்தோடின பலகரண்சி நோட்டுகள்…
இந்தக்காலத்தில்…

இது தான் காலமாற்றத்தின்….
விந்தையான காட்சிகள்..!!!

News

Read Previous

யாராலே?

Read Next

பன்னாட்டுக் கருத்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published.