பன்னாட்டுக் கருத்தரங்கம்

Vinkmag ad

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவம் மற்றும் தமிழியல் துறை ஒருங்கிணைப்பில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், உகாண்டா தமிழ்ச் சங்கம், தென்கயிலைத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 2023 நவம்பர் 22, 23 ஆம் தேதிகளில்
தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் என்னும் பொருளில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளன.

இக்கருத்தரங்கத்திற்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

ஆய்வறிஞர்களின் கவனத்திற்கு.

  1. ஆய்வுக் கட்டுரை 12 அளவுள்ள பாமினி எழுத்துருவில் 1.5 இடைவெளியில், 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2- ஆய்வறிஞர்களிடம் இருந்து பெறப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ஆய்வறிஞர் குழுவினரால் கூர்ந்தாய்வு செய்யப்படும்.

  1. தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ISSN இதழில் வெளியிடப்படும்.
  2. முனைவர்ப் பட்ட, முதுமுனைவர்ப் பட்ட ஆய்வாளர்கள், அனைத்து நிலைப் பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் அனைவரும் கட்டுரைகள் எழுதலாம்.
  3. ஆய்வறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்குச் சிறப்புச் சான்றிதழும், பாராட்டும் செய்யப்படும்.
  4. ஆய்வுக் கட்டுரை எழுத விரும்பும் ஆய்வாளர்கள் ஏதேனும் ஒரு பொருண்மையைக் கருவாகக் கொண்டு எழுதவும் (உதாரணமாக.சங்க இலக்கியத்தில் சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை, புனல் விளையாட்டு, நட்பு, விருந்தோம்பல், கல்வி, ஆளுமை, ஒழுக்கம் போன்ற தலைப்புகளில் அமைத்துக்கொள்ளுதல் நலம்.
  5. தேர்வு செய்யப்படும் ஆய்வுக் கட்டுரைக்குரியவர்கள் கருத்தரங்க நாளில் நேரில் வருகை தந்து ஆய்வுக்கட்டுரை வழங்க வேண்டும். நேரில் ஆய்வுக்கட்டுரை வாசிக்காதவர்களுக்கு எச்சூழலிலும் புத்தகமும் சான்றிதழும் வழங்கப்பட இயலாது.

8.கட்டுரையாளர்கள் தங்களின் கட்டுரைகளைக் கீழ்க்கண்ட mkutamil2010@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு 05.11.2023 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

  1. தகவல்கள் அறிய.
    முனைவர் போ.சத்தியமூர்த்தி,
    கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்,
    இயக்குநர் (பொ), தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவம் மற்றும்
    தலைவர், தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.
    9488616100

News

Read Previous

காலம் மாறிப்போச்சு

Read Next

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

Leave a Reply

Your email address will not be published.