கருப்பட்டி

Vinkmag ad

ஆறு சுவையில் பனை மரத்தின் கருப்பட்டி மட்டுமே இனிப்பு சுவையில் சேருகிறது…
படிக்க வேண்டிய பதிவு.

வெள்ளை கரும்பில் தயாராகும் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெள்ளைச் சீனி நம் உணவின் ஆறு சுவை உணவு இல்லை என்பதை அறிவீர்களா?.

இனிப்பு,புளிப்பு,உவர்ப்பு, கசப்பு,கார்ப்பு,துவர்ப்பு என்பதே ஆறு சுவை.இதை சம விகிதமாக தினசரி உணவில் நாம் சேர்த்துக் கொண்டால் உணவே மருந்தாக செயல் பட்டு மனிதனுக்கு நோய் வராது என்பதே தமிழ் மண்ணின் அறிவு சார்ந்த விதி.

நமது கிராமங்களில் காணப்படும் பொங்கல் திருநாளில் நாம் பயன் படுத்தும் கருப்பு கரும்பே நம் ஊர் நாட்டுக் கரும்பு. உடலுக்கு செரிமானமும்,நல்
புத்துணர்வும் தர வைக்கும் நாட்டுக் கரும்பு பாரம்பரியம் மிக்கது என்ற சந்தேகமும் இல்லை.

கருப்புக் கரும்பு:

கருப்புக் கரும்பின் பெயர் “ரஸ தாளி கரும்பு”.
இதில் உள்ள ரஸத்தை [ சாறு ] மட்டுமே எடுக்கலாம்.

வெள்ளைச் சீனி மற்றும் நாட்டு சர்க்கரை மற்றும் SUGAR FREE:

சீனாவில் இருந்து வந்தது வெள்ளை சீனி. இது வெள்ளைக் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது. நமக்கு இந்த சீன சீனி இடையில் கொண்டு இறக்குமதியாக கொண்டு வரப்பட்டு அதன் பின் வெள்ளை கரும்பை கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்டது. எரி சாராயம் கரும்பில் இருந்து கிடைப்பதால் இந்திய அரசியல்வாதிகள் சீன சீனி தயார் செய்வதில் ஆர்வம் காட்டினர்.

நாட்டு சர்க்கரையை வெள்ளை நிற சீனியாக ஆக்கப்படும் போது பாஸ்பரிக் ஆசிட் உள்பட பல விஷங்கள் கலந்தால்தான் கண்ணைக் கவரும் வெள்ளை நிறமாக கிடைக்கும்.வெள்ளை ஆக ஆக அதிக அமிலம் சேர்த்து பிளீச் செய்யப்படுகிறது என்பதை பிள்ளையை பெற்றவர்களும்,நோயாளிகளும் முதலில் புரிந்து கொள்ளுங்கள்..

அப்படியானால் எங்களுக்கு SUGAR FREE உள்ளதே என்று சில அறிவு சார்ந்த மன நோயாளிகள் சொல்வார்கள். ஆனால் SUGAR FREE இல் எந்த உணவுப் பொருளும் இல்லாமல் நேரடியாக நிலக்கரியில் இருந்து எடுக்கப்பட்ட ரசாயன இனிப்பு இது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.அடுத்து கிட்ணியை பணால் செய்ய அலோபதியின் யுத்த தத்துவம் SUGAR FREE.

அதனால்தான் பலர் நாட்டு சர்க்கரையை வாங்குகின்றனர். நாட்டு சர்க்கரை என்பதை நம் நாட்டு என்று யாரும் தயவு செய்து புரிந்து கொள்ளாதீர்கள். நாட்டு சர்க்கரையாக பிரித்தாலும் சற்று கெமிக்கல் சேர்க்காமல் இதை பிரிக்கவே இயலாது.மண்டை வெல்லம், அச்சு வெல்லம் இதிலும் அதிக கெமிக்கல் இல்லாமல் பிரிக்க இயலாது.ஆனால் வெள்ளை ஆக்கும் பாஸ்பரிக் அமிலம் மட்டும் இவைகளில் பயன் படுத்துவது இல்லை.

ஆக வெள்ளைக் கரும்பு ஆலை என்பதே சாராய ஆலைக்கு தேவையான எரி சாராயத்திற்காக உருவாக்கப்பட்டது. சீன சீனி செய்தால் மட்டுமே கழிவில் இருந்து எரி சாராயம் கிடைக்கும்.

நோய்களை பரப்பவே ஃரீமேசன்களின் துணையில் ரேஷன் கடையில் சீன சீனி வழங்கப்பட்டது. ரேஷனில் மஞ்சளாக உள்ளது. எனக்கு Parry’s வெள்ளைச் சீனி வேண்டும் என்று வெளியே வாங்கிய கெமிக்கல் போதை மண்டூஸ்களும் உண்டு. அரசு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் நினைத்தால் பனங்கருப்பட்டி அல்லவா கொடுத்து இருக்க வேண்டும்!!.

பனஞ்சர்க்கரை,பனங்கருப்பட்டி,பனங்கற்கண்டு:

இதுதான் நம் ஒரிஜினல் சக்கரம்.
சக்கரம் என்றால் சர்க்கரை என்று பெயர்.
இதுதான் ஆறு சுவை உணவுகளில் ஒன்றான தினமும் தவறாது உணவில் சேர்க்க வேண்டிய இனிப்புச் சுவை.

பாகவதம்,ராமாயணம்,மகாபாரதம் அனைத்திலும் பனை மரம் பற்றி வருகிறது.

பனந்தோப்புக்குள் யாதவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது உள்ளே சென்ற அரக்கனை கிருஷ்ணர் பனை மரத்தைப் பிடுங்கி அடித்து வீழ்த்தினார் என்று வரும்.

அர்ஜுணனின் வில் பனை உயரமாக இருந்தது என்கிறது மகாபாரதம்.500,1000,2000 அம்புகள் பனை மரத்தை வில்லாக வளைத்து எய்துவது அந்த கால நம் போர் முறை.

இந்தியா – பாக்கிஸ்தான் எல்லையில் தார் பாலைவனம் உள்ளது.இந்த ராஜஸ்தான் பகுதியில் புண்ணிய சரஸ்வதி ஆறு ஓடிய தடத்தில் பனை மரம் மற்றும் தென்னை மரம் இருந்த படிமங்கள் தற்போது கிடைக்கிறது. இதனால் பழைய பாரதம் முழுவதும் பனை மரங்கள்,தென்னை மரங்கள் இருந்ததை நாம் அறியலாம்.

வட நாட்டில் தென்னை மரம் வளராத நிலங்களான பஞ்சாப் போன்ற பகுதியில் கூட தேங்காய் வாங்கி கோவிலில் உடைக்கும் வழக்கம் இன்னமும் உள்ளது.

பனை ஏறுபவரிடம் வித்தியாசம் காட்டுகிறீகள்.அவர் தரும் கருப்பட்டி மட்டும் உங்களுக்கு இனிக்குமோ என்றவர் நம் பாரதியார்.

பிறந்த மண்ணை போற்றுவோம்.
இதிலும் குற்றத்தை காண முயலாதீர்கள்.
இழந்தவைகளை மீட்போம்.
நோய் இன்றி வாழ்வோம்.

அழிக்கப்பட்ட வரலாற்றை மீட்க நமது ஒற்றுமையான முயற்சியே என்றென்றும் உயர்வைத் தரும்.வலிமை தரும்.

இருக்கும் பனை மரங்களை காப்போம்.
கருப்பட்டி எனும் இனிப்பை தினமும் உணவில் சேர்த்து நலமாக வாழ்வோம்.

முழு அழிவிற்கு பிறகு யோசித்து எந்த பயனுமே இல்லை.

“என் மக்கள்”
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

நன்றி :-
T. பாலசுப்ரமணிய ஆதித்தன்.

தகவல் :- மரபு வழி சித்த வைத்தியர் மாலிக்
8220320197

News

Read Previous

ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிடவேண்டிய உணவுகள்..

Read Next

உழைப்பு

Leave a Reply

Your email address will not be published.