கதர் – பெயர் வந்த கதை

Vinkmag ad

கதர் – பெயர் வந்த கதை

ஒரு சமயம் மகாத்மா காந்தி அவர்கள், மௌலானா முகம்மது அலி,
மவ்லானா சௌகத் அலி ஆகியோரின் தாயாரான பீவி அம்மாள் அவர்களை சந்திக்க அவர் வீட்டிற்கு செல்கிறார்.
பதறிப்போன அவர்களோ
“நீங்கள் சொல்லி அனுப்பினால் நானே நேரில் வந்து உங்களை சந்தித்திருப்பேனே?” என்று சொல்ல, காந்தியடிகளோ
“இந்த நாட்டிற்காக இரண்டு வீரமிக்க சிங்கங்களை பெற்று தந்திருக்கிறீர்களே அதற்காக உங்களுக்கு நான் நன்றி செலுத்த வேண்டாமா?” என்றபோது,
உள்ளே சென்ற பீவி அம்மாள் ஓர் ஆடையை காந்தியடிகளிடம் கொடுத்து
” லைலத்துல் கதர் என்ற புனிதமிக்க இரவில் நானே பஞ்சிலிருந்து நூல் நூற்று ஆடையாக நெய்து உங்களுக்காக வைத்திருந்ததைத்தான் இப்போது உங்களுக்கு தருகிறேன்” என்று பீவி அம்மாள் சொல்ல
“அந்த இரவின் பெயரை மீண்டும் சொல்லுங்கள்” என காந்தியடிகள் கேட்க,
“அது புனிதமிக்க லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாகும்” என்றார்கள். அதைக்கேட்ட காந்தியடிகள்,
” இனி இப்படிப்பட்ட ஆடைக்கு கதர் ஆடை என்றே பெயர் சூட்டுகிறேன்” என்றார்.
அன்றிலிருந்து இன்றுவரை அதை
கதர் ஆடை என்றே அழைக்கிறோம்.

-நன்றி குர்ஆனின் குரல் மாத இதழ், மார்ச் 2018, பக்கம் 160

News

Read Previous

மிஸ்வாக் மரம் !!!

Read Next

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published.