மிஸ்வாக் மரம் !!!

Vinkmag ad

மிஸ்வாக் மரம் !!!

கீழக்கரையில்
வெளிநாடுகளில் வளரும் தன்மையுள்ள “மிஸ்வாக்’ என்ற மரம், சேதுக்கரையில் மட்டும் வளர்ந்துள்ளது.

ஆப்பிரிக்கா, ஏமன் நாடுகளில் வளரும் தன்மை கொண்ட இம்மரம், திருப்புல்லாணியில் உள்ள சேதுக் கரையில் 35 ஆண்டுகளாக யாருடைய கவனத்திலும் படாமல் வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. இதுகுறித்து கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனாமூனா சுல்தான் கூறியதாவது:

சேதுக்கரையில் வளர்ந்துள்ள “மிஸ்வாக்’ மரத்தின் வேர்களில் இருந்து சிறு குச்சிகளை துண்டுகளாக வெட்டி வைத்து, தினமும் பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம், பற்சிதைவு நோய் உள்ளிட்ட பல் சம்பந்தமான நோய்கள் வராது. வெளிநாடுகளில் இந்த மரத்தின் இலைகள், வேர்களை கொண்டு “டூத் பேஸ்ட்’ தயாரிக்கப்படுகிறது.

சதுப்புநிலப்பகுதியான சேதுக்கரையில் வளரும் இந்த அரிய வகை மரத்தை வேளாண்மைத் துறையினர் ஆய்வு செய்து, மேலும் இவ்வகை மரக்கன்றுகளை உருவாக்க முன்வரவேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் வேறு எந்தப்பகுதியிலும் இந்த “மிஸ்வாக்’மரம் இருப்பதாக தெரியவில்லை, என்றார்.

தகவல் :- மரபு வழி சித்த வைத்தியர் மாலிக்
8220320197

News

Read Previous

எளிய இயற்கை வைத்தியம்

Read Next

கதர் – பெயர் வந்த கதை

Leave a Reply

Your email address will not be published.