சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

Vinkmag ad

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி

வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி

அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை

சென்னை :

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான மூன்று T20 கிரிக்கெட் போட்டி நடக்குமா ? என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இராமநாதபுரம் அப்பாஸ் அலி கவலையடைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி செயல்பட்டு வருகிறது.  எனினும் அணிகளுக்கு தேவையான வசதிகளுக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இராமநாதபுரம் அப்பாஸ் அலி செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சியால் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று 20 போட்டிகள் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்ற நிலையில்  ஒரு சில நிறுவனங்கள் இலங்கை அணியின் விமான பயண கட்டணம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க ஒப்புக் கொண்டன.

சமீபத்தில் அந்த கிரிக்கெட் மைதானம் பிற சர்வதேச போட்டிகள் நடக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மைதானத்தை வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆதரவு தெரிவித்த நிறுவனங்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றன. மேலும் போட்டிகளை சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடத்த ஏற்பாட்டு செய்துள்ள நிலையில் இலங்கை அணியின் விமான பயணச் சீட்டு உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமல் அணியின் தலைமை பயிற்சியாளர் மிகவும் கவலையடைந்துள்ளார்.

இந்த அணியில் தமிழக வீரர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டி நடத்துவதன் மூலம் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் திறமை சர்வதேச அளவில் பரிணமிக்க உதவியாக இருக்கும்.

எனவே இந்த போட்டிகளை சிறப்புடன் நடத்த ஆதரவு நல்க விரும்புவோர்

அணியின் தலைமை பயிற்சியாளர் இராமநாதபுரம் அப்பாஸ் அலியை 78454 66866 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News

Read Previous

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!

Read Next

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய
அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின்
‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு…

Leave a Reply

Your email address will not be published.