ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

Vinkmag ad

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜா :

ஷார்ஜா பேலஸ் உணவகத்தில் முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல் ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரைச் சேர்ந்த சுப்ரபாரதிமணியன் என்ற எழுத்தாளரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஃஹ்ரூப் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் நீண்ட நாட்களுக்கு ஷார்ஜா பகுதியில் நடக்கும் இலக்கிய நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் மூலநூல் ஆசிரியர் இஸ்மாயில் மேலடி குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். அவரது மலையாள மொழியின் நாவலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தங்களது அறக்கட்டளை அதற்கான பொறுப்பேற்கும் என்றார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் முனைவர் பீ.மு. மன்சூர் ’புலம்பெயர் மணற்துகள்கள்’ கவிதை நூலை வெளியிட முஹம்மது மஃஹ்ரூப் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய பேராசிரியர் மன்சூர், இஸ்மாயில் மேலடியின் சி்ந்தனைகள் தமிழில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது கவிதைகள் அவலங்களை சுட்டுப் பொசுக்குவதாக அமைந்துள்ளது என்றார்.

அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், இந் தியர் நலவாழ்வு பேரவையின் துணைத் தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம், குறும்பட இயக்குநர் சசி எஸ். குமார். இளையான்குடி அபுதாகிர், வழுத்தூர் ஜா. முஹையதீன் பாட்சா, மேலூர் பாலாஜி பாஸ்கர், ரோஹினி, காயல்பட்டணம் அஹமது சுலைமான், கீழை எஸ்.கே.வி. ஷேக், லதா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நூலாய்வுரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லிடைக்குறிச்சி தில்ஷாத் பேகம் தொகுத்த துஆக்கள் குறித்த நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

உம் அல் குவைன் கிராமிய பாடகர் ‘வணக்கம்’ என்ற பாடல் மூலம் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மூல நூல் ஆசிரியர் இஸ்மாயில் மேலடி தமிழ் மக்களின் அன்பு தன்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக அமைந் துள்ளது. இந் த ஒத்துழைப்பு தொடர வேண்டும். தொடர்ந்து தமிழ், மலையாளம், அரபி என பல்மொழி கவிஞர்களின் கவியரங்கம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தனது கவிதை நூல் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை உள்வாங்கி சிறப்பான முறையில் ஆய்வுரை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி இலங்கை செம்மொழி எப்.எம். மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்ய மௌலவி சுபையிர் அஹில் முஹம்மது ஏற்பாடு செய்தார்.

நிகழ்வில் வி.களத்தூர் உமர் ஃபாரூக், மலையாள எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் சிறப்பான இலக்கிய நிகழ்வு நடந் தது மகிழ்ச்சியளிப்பதாக பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

News

Read Previous

ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

Read Next

ஹஜ் யாத்திரை

Leave a Reply

Your email address will not be published.