வாலிபக்கவிஞர் வாலி 

Vinkmag ad

வாலிபக்கவிஞர் வாலி 

திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன்   அவ்வூர் 

அரங்கநாதன் அருளாலே ,கவியரங்கங்கள் 

கருத்தரங்கங்கள், திரையரங்கங்கள் என் 

அனைத்தரங்கங்களிலும் ஜொலித்து 

மக்களின் மனவரங்கத்தில் தனக்கொரு 

தனியரங்கம் அமைத்துக்கொண்டார் . .

மயக்கமா ! கலக்கமா ! பாடலைக் கேட்டதால் 

மதுரைக்குச் செல்லாமல் சென்னை வந்தார் 

அத்தைமடி மெத்தையடி பாடலில் துவங்கி 

வித்தகனாய்  திரையுலகில் விளங்கி நின்றார் .  

எதிரியின் பலத்தில்  பாதி தனக்கு வரவேண்டுமென 

 கருதியே வாலியென்று பெயர் புனைந்தார் 

எதிரிகளே இல்லாமல் எளிதில் அனைவரையும் 

இனிமையாய்ப்பழகி நண்பர்களாக்கி வைத்தார் .   

ஓவியம் பயிலவே சென்னைக்கு வந்த அவர்

காவியங்கள் படைத்துவிட்டார்- தமிழில்   

கலைஞர்  காவியமும் , ராமானுஜ  காவியமும் 

கவிதையின் வடிவிலே  கவினுறப்படைத்துவிட்டார் . 

மையோடு எழுதுகோலில் , மையலையும் சேர்த்து 

மனங்கவர் பாடல்கள்  படைத்ததனால் – அவரை 

திரையுலகினர் எல்லாம்  வாலிபக்கவியென்று 

செல்லமாய் அழைக்கும் சிறப்படைந்தார் . 

எண்பத்திரண்டு வரை  கவிதைகள்  , நூல்களொடு 

எண்ணற்ற பாடல்கள், எழுதியே குவித்துவிட்டார்.

மண்ணுலகில்  தனது கவிப்பணி முடிந்ததென 

கண்ணதாசனைத்தேடி விண்ணுலகம் சென்றுவிட்டார் . 

எண்ணத்தில் நிலைத்துநிற்கும் வாலியின் புகழ் 

திண்ணமாய்த் திரையுலகில் நிலைத்து நிற்கும் .   

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

News

Read Previous

குட்டி கதை – அன்பு

Read Next

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக !

Leave a Reply

Your email address will not be published.