மோடி அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி?

Vinkmag ad

மோடி அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி?

ஒன்றிய மோடி அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும்
உச்ச நீதிமன்றம் கிடிக்கு பிடி போட்டுள்ளது.
பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள் என உச்ச நீதிமன்றம் கிடிக்கு பிடி போட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசு, குஜராத் மாநில அரசு தங்களின் கூட்டுச் சதி அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில் பம்முகின்றன.
விடுதலைக்கான காரணத்தை நீங்கள் (ஒன்றிய, மாநில அரசுகள்) தெரிவிக்காவிட்டால் நாங்கள் சொந்த முடிவை எடுப்போம் என உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இது மோடி ஆட்சியில் தற்போது உள்ள நிலையில் மக்களிடம் அதிகரித்து வரும் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை தற்காலிகமா கத் தக்க வைக்க உதவும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் பலரும். காரணம் இந்த வழக்கு கடந்து வந்த பாதை இன்று வரை கொடுந் துயரங்கள் நிறைந்ததாகவே உள்ளது.  

பில்கிஸ் பானுவை  5 மாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வெறிபிடித்த ஆர்எஸ்எஸ் கும்பல்  பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி சின்னாபின்ன மாக்கியது. அவரது கையில் இருந்த 3 வயது குழந்தையை அவர் கண்முன்னே தரையில் அடித்தே கொடூரமாகக் கொன்றது. உடனிருந்த   குழந்தையைப் பெற்று இரண்டு நாளே ஆன தாயையும் விட்டுவைக்காமல் பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளாக்கினர்.  இளம் பிஞ்சுக் குழந்தை  உள்ளிட்ட
7 பேரை கொடூரமாகக் கொன்று வீசியிருக்கிறது.
இந்தக் கொடூரம் நடந்த மறுநாளே
(2022 மார்ச் மாதம்)
புகார் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்பு ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது. ஆனால் அதில் எந்த குற்றவாளியின் பெய ரும் இடம்பெறவில்லை. இதுதான் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது  சட்டத்தின் ஆட்சி நடைபெற்ற லட்சணம்.
இந்நிலையிலேயே உச்சநீதிமன்றம் தலை யிட்டு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. 2004 ஆம் ஆண்டில்தான் முதல் கைது நடைபெற்றது. ஆனாலும் பில்கிஸ் பானுவிற்குக் குஜராத் நீதி மன்றம் நீதிவழங்கவில்லை. அதன் பின்னர்தான் வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டு 2008 இல் குற்ற வாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் சிறைத் தண்டனை முடிவதற்குள் அமித்ஷாவின் ஒன்றிய உள்துறையின்  ஆசி யோடு, குஜராத் அரசு 11குற்றவாளிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்தது. கோத்ரா பாஜக எம்எல்ஏ ரவுல்ஜி ‘’தண்டனை பெற்றிருப்பவர்கள் பிராமணர்கள், அவர்கள் நல்ல கலாச்சாரம் கொண்டவர்கள். தவறான நோக்கங்களால் கூட  தண்டனை பெற்றிருக்கலாம் என முட்டுக் கொடுத் தார். இதுதான் பாஜகவின் ஆட்சியில் நீதியின் லட்சணம்.
இந்த நிலையிலேயே உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் நாகரத்னா அமர்வு சரியான தலையீட்டைச் செய்திருக்கி றது. கடைசி வரை நெறி பிறழாமல் குற்றவாளிக ளின் விடுதலைக்குப் பின்னிருக்கும் கூட்டுச் சதி காரர்களையும் கண்டறிந்து தண்டித்திட வேண்டும். நீதி நிலை நாட்டப் பட வேண்டும் இது தான் நீதித்துறைமீதான மக்களின் நம்பிக்கை என்கின்றனர் அரசியல் தலைவர்கள் என்னவோ போங்க.

News

Read Previous

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள்

Read Next

துபாய் நகரில் அன்னம் நிறுவனத்தின் மிருதுவான, ருசியான மற்றும் ரசாயாண கலப்பில்லாத ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published.