பாரதியார் பிறந்த நாள் விழா

Vinkmag ad

கவிராசன் இலக்கியக் கழகத்தின் சார்பில், தொடர்ந்து 15-ஆவது ஆண்டாக, பாரதியார் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டையில் கொண்டாடப் பெற்றது.

????????????????????????????????????

விழாவிற்கு, தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை ஏற்றார். சிவகங்கை எழுத்தாளர் எஸ்.கே.எஸ். குமார் முன்னிலை வகித்தார். பால சாகித்ய புரஸ்கார் விருதாளர் கவிஞர் மு. முருகேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த விழாவை முன்னிட்டு, நீதான் அறக்கட்டளையுடன் இணைந்து, மாநில அளவில், பொது மக்களுக்கான ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு இருந்தது. அதில், இறுதி நடுவராக, பிரபல எழுத்தாளர், பட்டுக்கோட்டை பிரபாகர் செயல்பட்டு, பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து இருந்தார். முதல் பரிசு பெற்ற திருச்சி வி. தனலெட்சுமி, இரண்டாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை க. கோவிந்தசாமி மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற திருவாரூர் அ. வென்சி க்ளாடியா மேரி ஆகியோருக்கு, இந்த விழாவில் பரிசுகள் வழங்கப் பெற்றன.

மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக, கவிஞர் முருகபாரதி எழுதிய “குயில் காணாத ரசிகன்” எனும் கவிதை நூல் வெளியிடப் பெற்றது. இந்த நூலினை, கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட, கவிஞர் மு. முருகேஷ் பெற்றுக் கொண்டார். 

தொடர்ந்து, பாரதியாரைக் கொண்டாடவும், கொண்டு சேர்க்கவும் தவறிய தமிழ்ச் சமூகம் குற்றமுடையது என்ற தலைப்பில், ஒரு வழக்காடு மன்றம் நடைபெற்றது. நடுவராக, நாகர்கோவில் பேராசிரியர் த. ராஜாராம் உரையாற்றினார். வழக்கினை நாகர்கோவில் பேச்சாளர் ரெ. ராஜ்குமார் தொடுக்க, திருச்சி பேராசிரியர் ந. விஜயசுந்தரி மறுத்துப் பேசினார்.

விழாவின் தொடக்கத்தில், கவிராசன் இலக்கியக் கழகத்தின் தலைவர் கவி. முருகபாரதி வரவேற்புரை ஆற்றினார். வழக்காடு மன்றக் குழுவினரை, செயலாளர் மகா. சுந்தர் அறிமுகம் செய்தார். விழா நிறைவில், பொருளாளர் கி. ஹரிமோகன் நன்றியுரை ஆற்றினார்.  விழா ஏற்பாடுகளை, துணைத் தலைவர் க. குருஸ்ரீராம். துணைச் செயலாளர் மு.ச. பாலாஜி மற்றும் நீதான் அமைப்பினர் செய்திருந்தனர். 

புகைப்படம்:

1) கவி. முருகபாரதி எழுதிய “குயில் காணாத ரசிகன்” என்ற கவிதை நூலை, கவிஞர் .தங்கம் மூர்த்தி வெளியிட, கவிஞர் மு. முருகேஷ் பெற்றுக் கொள்கிறார். நடுவில், நூலின் ஆசிரியர் உள்ளார். 

News

Read Previous

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் மஸ்னவி ஷரீஃப்பின் ஏழு பாகங்கள் வெளியிடப்பட்டன

Read Next

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல்       புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.