கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல்       புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது

Vinkmag ad

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல்
         புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது

    தமிழிலக்கியத் தடத்தில் தொடர்ந்து இயங்கிவரும் கவிஞர் மு.முருகேஷ், கவிதை, ஹைக்கூ, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் என பல தளங்களிலும் எழுதி வருபவர்.
     கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கியச் செயல்பாடுகளில்
தீவிரமாகப் பங்களித்து வரும் மு.முருகேஷ், இதுவரை 49 நூல்களை எழுதியும், 
12 நூல்களைத் தொகுத்தும் உள்ளார். சமீபத்தில் ‘தமிழ் ஹைக்கூ:

அப்துல் ரகுமான் முதல் மித்ரா அவரை’ எனும் ஹைக்கூ ஆய்வு நூலையும் எழுதியுள்ளார். இது அவரது 50-ஆவது நூலாகும்.

      இந்த நூலின் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் கவிஞர் தங்கம் மூர்த்தியின்
இல்லத்தில் எளிய முறையில் நடைபெற்றது. நூலினை திலகவதி அண்ணாமலை வெளியிட, கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.
       படத்தில் கவிஞர் தங்கம் மூர்த்தி, நூலாசிரியரின் மூத்த சகோதரர் மு.அண்ணாமலை, ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி ஆகியோருடன் கவிஞ்ர் மு.முருகேஷூம் உள்ளார்.

News

Read Previous

பாரதியார் பிறந்த நாள் விழா

Read Next

தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published.