ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் மஸ்னவி ஷரீஃப்பின் ஏழு பாகங்கள் வெளியிடப்பட்டன

Vinkmag ad

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் மஸ்னவி ஷரீஃப்பின் ஏழு பாகங்கள் வெளியிடப்பட்டன

ஷார்ஜா :

ஆத்மிக ஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மஸ்னவி ஷரீஃப் என்ற பெருஞான நூலை அதன் மூலமொழி ஃபார்ஸியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
தமிழகத்தில் ஃபஹீமிய்யா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையின் சார்பில் அந்த நூலை நரியம்பட்டு ஸலாம் அவர்கள் தமிழாக்கம் செய்தார்கள். ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ் அதை வெளியிட்டது.

ஷார்ஜாவில் நடந்த 41வது சர்வதேச புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளான 13-11-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகப் பிரிவின் சார்பில் மஸ்னவி ஷரீஃபின் ஒருங்கிணைந்த ஏழு பாகங்களும் மொத்தமாக வெளியிடப்பட்டன.  

இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர் திண்டுக்கல் காஜா முஹ்யித்தீன் தலைமை வகித்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹான் முன்னிலை வகித்தார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரகப் பிரிவு பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் கிராஅத் ஓதினார்.

அஹ்மத் ஜலால் ஃபஹீமீ வரவேற்றுப் பேசினார்.

அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் பி.எஸ். அஹ்மத் ஸாலிஹ் ஃபஹீமீ  நபிப்புகழ் பாடினார்.

ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸின் அமைப்பாளர் மௌலவி டி.எஸ்.ஏ. அபூதாஹிர் ஃபஹீமி மஹ்ழரி நூல் அறிமுக உரை நிகழ்த்தினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழக அமீரகப் பிரிவின் அமைப்பாளர்  அல்ஹாஜ் ஏ. முஹம்மத் மஃரூஃப்  நூல்களை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

காப்பியக்கோ ஜின்னா ஷர்ஃபுத்தீன், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் சஹாபுத்தீன், இளையான்குடி அபுதாஹிர், மஸ்கட் பஷீர், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், இந்திய அரசின் வர்த்தகத்துறை துணை இயக்குநர் சுனில் குமார் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

அல்ஹாஜ் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர்  முதுவை ஹிதாயத்துல்லாஹ் நன்றியுரை நிகழ்த்தினார்.

அல்ஹாஃபிழ் குத்புத்தீன் துஆ ஓதினார்.

ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ் மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினர் இணைந்து வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 

News

Read Previous

‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லை…

Read Next

பாரதியார் பிறந்த நாள் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *