பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு

Vinkmag ad

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு

பரமக்குடி :
பரமக்குடியில் கீழ முஸ்லீம் திருமண மஹாலில் கவிஞர் இதயா எழுதிய அகர மலர்கள் என்ற கவிதை நூல் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு கீழ்முஸ்லிம் ஜமாத் சபைச் செயலாளர் எம்.சாதிக் அலி தலைமை வகித்தார். கீழ முஸ்லிம் ஜமாத் சபைத் தலைவர் ஷாகுல் ஹமீது, பொருளாளர் லியாக்கத்தலி கான், கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ஷாஜஹான், தொடக்கப்பள்ளித் தாளாளர் கமால்தீன், நர்சரிப் பள்ளித் தாளாளர் முஹம்மது உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜவ்வாது புலவரின் எட்டாம் வழித்தோன்றல் ஈரோடு தமிழ்மாமணி எம். கே. ஜமால் முஹம்மது நூல் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார். அவர் தனது உரையில் ஜவ்வாது புலவரின் வழித்தோன்றலான எனக்கு இந்த மண்ணில் நூல் வெளியிட்டு சிறப்புரை வழங்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கவிதை நூலில் கவிஞர் இதயாவின் கவிதைகளில் சமூக சிந்தனைகள், அன்பு, காதல், பாசம் உள்ளிட்டவை அதிகம் இருப்பது சிறப்புக்குரியது. இது அவரது முதல் முதல் நூலக இருந்தாலும் ஒரு அனுபவ கவிஞர் போன்றவராக காணப்படுகிறார். தொடர்ந்து அவர் பல நூலகளை படைக்க வாழ்த்துகிறேன் என்றார்.
தமுஎகச மாவட்டத் துணைச் செயலாளர் கவிஞர் கலையரசன், எமனேஸ்வரம் எழுத்தாளர் நீ.சு.பெருமாள், பாரதி பாவாணர் செந்தமிழ் வானத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.சோலைராஜா, வழக்கறிஞர் சதீஸ்குமார் ஆகியோர் நூல் ஆய்வுரை வழங்கினர். தி.மு.க.வின் பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவ ரெத்தினம், தி.மு.க.வின் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளர் அப்துல் மாலிக், ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஏ. ஜெ. ஆலம், இந்திய தேசிய காங்கிரஸ் சேவாதளத்தின் மாநிலச் செயலாளர் அப்துல் அஜீஸ், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அஜ்மல்கான், உதவித் தலைமையாசிரியர் புரோஸ்கான், டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் பேராசிரியர் அப்துல் ஹாதி, தலைமையாசிரியர் திருநீலகண்ட பூபதி, சட்டகளம் பத்திரிக்கை ஆசிரியர் முகம்மதலி ஜின்னா, தமுமுக மாவட்டச் செயலாளர் சிந்தா ஷேக் மதார், எழுத்தாளர் ஆமினா முஹம்மத், உடற்கல்வி இயக்குநர் இந்திரஜித், உடற்கல்வி ஆசிரியர் சிவகுருராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகி எமனேஸ்வரம் கமல் முஸ்தபா, இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் இதயா ஏற்புரை வழங்கினார். அவர் தனது உரையில் இந்த கவிதை நூலில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கவிஞர் கலீல் ரகுமான் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். சாதிக் நஸ்ரத் கான் நன்றி கூறினார். ஆசிரியர் அன்வர் ராஜா விழா ஏற்பாடுகளைச் செய்தார்.

News

Read Previous

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி 

Read Next

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published.