பணிவும் துணிவும்

Vinkmag ad

பணிவும் துணிவும்.

நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.

உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி.

இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன்.

செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் குறைந்து வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.

கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.

News

Read Previous

ஹஜ் யாத்திரை

Read Next

அல் அய்ன் நகரில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி 

Leave a Reply

Your email address will not be published.