அல் அய்ன் நகரில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி 

Vinkmag ad

அல் அய்ன் நகரில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி 

அல் அய்ன் : 

அல் அய்ன் நகரில் உள்ள லூலூ ஹைபர்மார்க்கெட்டின் குவைத்தாத் கிளையில் அல் அய்ன் மலையாளி சமாஜம் சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் பிரபல இஸ்லாமிய பாடகர் மறைந்த நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் மகனார் நாகூர் இ.எம். ஹனிபா நவுசாத் அலி மற்றும் குழுவினர் பங்கேற்று பாடல்களை பாடினர். 

நாகூர் ஹனிஃபா பாடிய பல்வேறு பாடல்களை தமிழர்கள் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர். மேலும் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி பாடல்களும், கேரளாவின் மாப்பிள்ளை பாடல்களும் பாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் நாகூர் இ.எம். ஹனிபா நவுசாத் அலி பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  சங்கீத ரெஸ்டாரெண்டின் பங்குதார் கீழக்கரை  ஏ. முகம்மது மக்ரூப் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். 

அல் அய்ன் மலையாளி சமாஜ தலைவர் பொறுப்பு வகிக்கும் ரமேஷ் குமார்,  பொது செயலாளர் வினோத் பாலசந்திரன், பொழுது போக்குதுறை செயலாளர் பைஜு பட்டாலி, அல் அய்ன் இந்திய சமூக மைய தலைவர் முபாரக் முஸ்தபா, பொதுச் செயலாளர் மணிகண்டன, லோக கேரளா சபா அமைப்பின் இ.கே. சலாம்,  லூலூ குழுமத்தின் பிராந்திய இயக்குநர் சாஜி ஜமாலுதீன், பொது மேலாளர் பிரோஸ் பாபு, சமூக ஆர்வலர்கள் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில், சென்னை இப்ராஹிம், கோட்டாறு ஆசாத், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியானது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சி என்பதால் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். .

News

Read Previous

பணிவும் துணிவும்

Read Next

பரமக்குடி மக்கள் நூலகம் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *