பரமக்குடி மக்கள் நூலகம் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா

Vinkmag ad

பரமக்குடி மக்கள் நூலகம் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா

மக்கள் நூலகம் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா மக்கள் நூலகத் தலைவர் செ.சந்தியாகு தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் வே.இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.செயலாளர் சி.பசுமலை மக்கள் நூலக செயல்பாடுகளை விவரித்தார்.

டாக்டர் பட்டம் பெற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர் த.சந்தோஷ் கண்ணாவை பாராட்டி நல்லாசிரியர் அ.பவுல் முன்னாள் தலைமை ஆசிரியர் ப.சந்திரபோஸ் வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வேந்தை வை.சிவா பிஎஸ்என்எல் வே.சேதுராஜன் ஆகியோர் பாராட்டி பேசினர்.

நெல்லை ஜெயந்தா எழுதிய தொட்டிலோசை என்னும் கவிதைத் தொகுப்பினை கணினி ஆசிரியர் கே.செந்தில்குமார் திறனாய்வு செய்தார். நூல் விமர்சனத்தில் எழுத்தாளர் நா.ஜெயராமன் தமிழ் ஆசிரியர் எஸ்.சேவியர் முதுகலை ஆசிரியர் ஆ.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலை ஆசிரியர் எஸ்.ஐயப்பன் வழக்கறிஞர்கள் பி.சக்திவேல்ராஜன் எஸ்.பிரேம்குமார் ஆசிரியர்கள் ந.தண்டாயுதபாணி ப.இன்பா யோகாயின் சி.செந்தில்குமார் விவசாயிகள்சங்கம் என்.எஸ். பாஸ்கர பத்மநாபன் மாணவர் சங்கம் எல்.கார்த்திக்ராஜா நூலகர் எஸ்.சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செயற்குழு உறுப்பினர் எல்.நடராஜன் நன்றி கூறினார்.

News

Read Previous

அல் அய்ன் நகரில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி 

Read Next

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

Leave a Reply

Your email address will not be published.