குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்

Vinkmag ad

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்

குவைத் :

குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து குவைத் நாட்டின் இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவின் சார்பில் குவைத் நாட்டின் இந் திய தூதரகத்துக்கு அருகில்  ஆர்ப்பாட்டம் நடந் தது.

அவர்கள் ’அல்லாஹு அக்பர்’ (இறைவனே மிகப்பெரியவன்) என்ற பெயரில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

இந் தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடந் து வரும் அத்துமீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் அமைதி காத்து வருவது கவலையளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் டனா சரப் கூறியதாவது :  இந்தியாவில் மத தீவிரவாதம் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. அந்த நாட்டின் குடிமக்கள் முஸ்லிம் நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் எந் த விதமான பாதிப்பும் இல்லாமல் அவர்களது மத சடங்குகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எங்களது எதிர்ப்பை, கருத்துக்களை இந் திய தூதரகம் அந்த நாட்டுக்கு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும்.

குவைத் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே சிறப்பான நல்லுறவு இருந் து வருகிறது.  இந்திய அரசு அனைத்து மதத்தையும் சரிசமமாக மதிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 120 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

News

Read Previous

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் எஸ். நெய்னா முகம்மது வஃபாத்து

Read Next

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

Leave a Reply

Your email address will not be published.