கட்டிடக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவோம்

Vinkmag ad

கட்டிடக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவோம்

தமிழகத்தின் ஏதோ ஒரு ஆற்றில் இருந்து அள்ளப்பட்ட மணலே மாலத்தீவில் கட்டிடங்களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. பாலைவன நாடுகள் என்று அழைக்கப்படும் வளைகுடா நாடுகளில் ஆற்று மணல் இல்லாததால் ஏதோ ஒரு நாட்டில் இருந்தே மணல் இறக்குமதி செய்யப்படுகின்றது.

 நாம் வியந்து பார்க்கும் கட்டிடங்கள் அனைத்திலும் மணல் ஒளிந்து கொண்டு உள்ளது. ஒருவர் வீடு கட்டக்கூடாதா என்றால் கட்டலாம். வீடு என்பது வசிப்பவரின் தேவைக்கு போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால் மாளிகை என்பது செல்வ நிலையின் அடையாளம். இரண்டு பேர் வசிப்பதற்கும் 10 ஆயிரம் சதுர அடி மாளிகை கட்டப்படுவதை பார்க்கிறோம். முகேஷ் அம்பானி மும்பையில் கட்டி உள்ள 27 அடுக்கு மாளிகை ஏறக்குறைய ஐந்து லட்சம் சதுர அடி பரப்புடையது. ஆனால் அங்கிருந்த அவருடைய குடும்ப உறுப்பினர்களோ மொத்தம் ஐந்து பேர்தான். 

அதே மும்பையில்தான் வீடற்றுச் சேரிப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்தியாவின் ஒன்பது கோடி நகர்ப்புற வீடுகளில் ஒரு கோடியே 10 லட்சம் வீடுகள் காலியாக இருந்தன என்கிற தகவலை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆனாலும் வளர்ச்சித் திட்டங்கள் குறையவில்லை. யாருக்காக அந்த வளர்ச்சி என்பதுதான் கேள்வி.

 இந்தியாவில் மட்டும் ஓராண்டில் ஏறத்தாழ 3 கோடி டன் வரை கட்டிடக்கழிவு உருவாகிறது. இவற்றில் ஐந்து விழுக்காடு மட்டுமே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரில் இது 98% ஆக உள்ளது. நாம் எப்போது அந்த இடத்திற்கு முன்னேறப் போகிறோம்?

(எழுத்தாளர் நக்கீரன் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையிலிருந்து)

News

Read Previous

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

Read Next

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை 

Leave a Reply

Your email address will not be published.