விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

Vinkmag ad

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்- 31.08.2022

வினைகளை தீர்க்கும் 

விநாயகனே போற்றி.

விக்கினங்கள் அகற்றும் 

விநாயகனே  போற்றி.

விசனங்கள் போக்கும் 

விநாயகனே  போற்றி

விரிசடை சிவன்மகன்

விநாயகனே  போற்றி.

விசாலாட்சி மைந்தனே ,

விநாயகனே போற்றி-.

விஷ்ணுவின் மருமானே

விநாயகனே போற்றி.

விளிம்பித சூத்ர 

விநாயகனே போற்றி .

விண்ணவரெல்லாம் வணங்கும் 

விநாயகனே 

விரைந்து செல்லும் எலிவாகன

விநாயகனே  போற்றி.

விவேகமாய் பழம் வென்ற

விநாயகனே  போற்றி- முருகன்

விவாகம் நடத்தி வைத்த

விநாயகனே  போற்றி.

விசித்திர உருவம் கொண்ட

விநாயகனே  போற்றி.

வியாச பாரதம் எழுதிய 

விநாயகனே போற்றி. 

விலங்கு யானை முகம் கொண்ட 

விநாயகனே  போற்றி.

விதவிதமாய் பட்சணங்கள்

விரும்பிடுவோய் போற்றி..

வித்தகராய் விளங்கிட அருளும்

விநாயகனே  போற்றி.  

விநாயக சதுர்த்தியில் 

விரதம் இருந்து உன்னை 

விழுந்து வணங்கிடுவோர்க்கு

விருப்பங்கள் நிறைவேற்றும்

விநாயகனே  போற்றி. போற்றி.

அன்புடன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

News

Read Previous

முகவரி

Read Next

கட்டிடக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவோம்

Leave a Reply

Your email address will not be published.