இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

Vinkmag ad

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு.

இராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விரைவில் விடுதலை.

இராமேஸ்வரம் மீனவர்களை 27 பேர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவர் என இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி உறுதி.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்வும் 50 ஆவது வருடாந்த மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ் கனி எம்பி, இலங்கை சென்றுள்ளார் .

இதனையடுத்து இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ் கனி சந்தித்து பேசினார்.

இதில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனியிடம் அமைச்சர் அலி சப்ரி கேட்டறிந்தார். பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி தனது தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 27பேர்கள் சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் அலி சப்ரிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை பரீசலிப்பதாகவும் 27மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அதேபோல் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

News

Read Previous

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது

Read Next

உலகமே உணரட்டும்!

Leave a Reply

Your email address will not be published.