இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு…

Vinkmag ad

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/09/2023அன்று மாலை ஈரோடு செல்ல பாட்ஷா வீதியில் உள்ள (MIS) ஹாஜி மீரா அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் மரியாதைக்குரிய அல்ஹாஜ் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் அவர்கள் தலைமை வகித்தார். முஸ்லிம் யூத் லீக்,மாநில தலைவர் பள்ளப்பட்டி எம்.கே.முஹம்மது யூனுஸ் வடக்கு மாவட்ட தலைவர் ஹாஜி எஸ். ஏ.அஸ்கர் அலி செயலாளர் ஹாஜி எஸ். ஏ.சான் பாஷா பொருளாளர் ஏ.ஹாதிம் தாய்,தெற்கு மாவட்ட தலைவர் எம்.நூர் முஹம்மது சேட் பொருளாளர் யு.கே.அகமது சிராஜ் மாவட்ட பிரதிநிதி இ.கே.எம்.முஹம்மது கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துவக்கமாக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் வரவேற்புரை மற்றும் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். அதன் பின்னர் ஈரோடு தெற்கு மாவட்ட வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். மேலும் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 22 பிரைமரி நிர்வாகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவராக சத்தியமங்கலம் ஹாஜி எஸ்.ஏ அஸ்கர் அலி மாவட்ட செயலாளராக ஈரோடு எம்.முஹம்மது ஆரிப் மாவட்ட பொருளாளராக ஈரோடு இ.கே.எம்.முகம்மது கலீல் துணைத் தலைவர்களாக யு.கே. அகமது சிராஜ் ஹாஜி எஸ்.ஏ சான் பாஷா, என்.முத்து பாவா ஏ.அலாவுதீன் செட்,கே.ஷாகுல் ஹமீது மாவட்ட துணைச் செயலாளராக ஏ.முஹம்மது அனிபா,எஸ்.முஹம்மது கான்,எஸ்.எல்.அசன் கான், எஸ்.முஹம்மது பாசித், எஸ். ஜாபர் சாதிக் ஆகியோரும் மாநில பிரதிநிதிகளாக அல்ஹாஜ் இ.கே.எம்.முஹம்மது தாஜ் மொய்தீன் மற்றும் அந்தியூர் ஏ. ஹாதிம் தாய் ஆகியோரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சலாமத்து பாஷா,எஸ்.ஏ. ஜாகிர் உசேன் ஏ.அமீநுதீன் எஸ்.பாதுஷா மொய்தீன் பிரைமரி நிர்வாகிகள் ஈரோடு பி.பி. அக்ரஹாரம் ஆர்.எஸ்.ஐ. நாசர் அலி, ஏ.முஹம்மது சாலின், சுல்தான்பேட்டை எஸ்.ஏ.நியாமத்துல்லா,எம். ரியாஜுதீன் கருங்கல்பாளையம் எஸ்.ஷாஜகான்,எஸ்.லுக்மனுல் ஹக்கீம் வி.வி.சி.ஆர். நகர் என்.சையது அபுதாஹிர் பழக்கார தெரு எம்.சிக்கந்தர் எஸ்.முஹம்மது உசேன் ஆலமர தெரு ஏ.சபியுல்லா,என்.ஜாபர் சாதிக் விவேகானந்தர் நகர் ஜி. முஸ்தபா சங்கன் துரை ஏ.சையது நாசர் லக்காபுரம் ஹாஜி எம். இப்ராஹிம், எல்.பி.ஜலில் காங்கயம் பாளையம் கே.எம்.அலீம், எம்.காஜா பாவா சென்னிமலை எம்.நூரே ஆலம், பி. அப்பாஸ் பெருந்துறை பி.கௌஸ் மைதீன்,எஸ்.ஷான் பாஷா சத்தியமங்கலம் டவுன் எஸ். எம்.முஹம்மது கான், எஸ். ஷாஜகான் தாளவாடி மீர் சையது முஜிபுல்லா, பங்களா புதூர் முஹம்மது ஆரிப், முஹம்மது அப்துல்லா கான், பாத்திமா நகர் சனாவுல்லா, அப்துல் சலாம், சவுண்டபூர் சையது ஷரீஃப்,மக்தா பாய் பெருந்தலையூர் சனாவுல்லா, அயுப்கான் மேவாணி எஸ்.ஷாஜகான்,சாஜிதீன் அந்தியூர் டீ முஸ்தபா, ஏ. முகமது ரஃபி, சத்தியமங்கலம் முஸ்தாக் அகமது ஈரோடு நிகால் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாவட்ட தலைவர் எம். நூர் முஹம்மது சேட் நன்றியுரை கூறினார். இளைஞர் அணி தலைவர் எம்.கே.முஹம்மது யூனுஸ் துவாவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

News

Read Previous

பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்!- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

Read Next

வள்ளலார் 201

Leave a Reply

Your email address will not be published.