தனியார் மருத்துவமனை சோதனையில் கொரோனா பாசிடிவ்: அரசு சோதனையில் நெகடிவ்

Vinkmag ad

தனியார் மருத்துவமனை சோதனையில் கொரோனா பாசிடிவ்: அரசு சோதனையில் நெகடிவ்

இண்டிகோ ஊழியர் இறப்பில் குழப்பம் ஏன்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த ஏர்லைன்ஸ் ஊழியருக்கு, அரசு மருத்துவமனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்துள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனையில் கொரோனா இருப்பதாக வந்துள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.செங்கல்பட்டை சேர்ந்த 57 வயது இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் வெள்ளிக்கிழமை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஆனால் தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கைகளில் சுகாதாரத்துறை இவரது இறப்பைக் குறிப்பிடவில்லை. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறுகையில், ’தனியார் மருத்துவமனையில் அவருக்கு செய்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொற்று இல்லை என வந்துள்ளது. எனவே இந்த விவகாரம் குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

News

Read Previous

இன்று.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்–1930

Read Next

தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

Leave a Reply

Your email address will not be published.