பெண் குழந்தைகள் தினம்

Vinkmag ad

பெண் குழந்தைகள் தினம்

மகளொருத்தி பிறந்து விட்டால்
மகாலட்சுமி பிறந்ததாக
மனதாரக் களிப்பதுவே  வழக்கம் .
மகளொருத்தி பிறந்துவிட்டால்
வகை வகையாய் அழகு செய்து
உவகை எய்துவதே வழக்கம்.
மகளொருத்தி வளர்கையிலே
மனையியலில் மிளிர்கையிலே
அகமகிழ்ந்து பார்ப்பதுவே வழக்கம்
மகளுக்குக் கல்வி  தந்து
மற்றவரை விஞ்சிநின்றால்
மனதினிலே மகிழ்வதுவே வழக்கம்
மகளவளின் மனம் நிறையும்
மருமகனை இணைத்துவிட்டால்
மகிழ்வது பெற்றோரின் வழக்கம்.
பிறந்த வீட்டை விட்டுப்
புகுந்த வீட்டில் சென்றும்
சிறந்த பெயரெடுத்தல்  வழக்கம்.
மருமகளும் மகள்போல
மனதுடனே அமைந்துவிட்டால்
மனதினிலே இல்லை ஒரு கலக்கம்.
ஆஸ்திக்கொரு ஆணென்று சொலவடை கூறுவது வழக்கம்.- அந்த
ஆஸ்தியே பெண்தான் என்பதுதானே இங்கு நடைமுறையில் இருந்துவரும் வழக்கம்.
மகளாக அவதரித்த மகளிரை சக்தியென போற்றுதல் மன்பதையில் வழக்கம்.
மகளிருக்கு சம உரிமை
மனமார அளிப்பதற்கு நமக்கு ஏன் இனியும் தயக்கம்.
தேசிய பெண்குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

News

Read Previous

சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன ?

Read Next

நம் தேசியக் கொடி பள்ளிவாசல்களில் பட்டொளி வீசி பறக்கட்டும்..

Leave a Reply

Your email address will not be published.