நம் தேசியக் கொடி பள்ளிவாசல்களில் பட்டொளி வீசி பறக்கட்டும்..

Vinkmag ad

நம் தேசியக் கொடி பள்ளிவாசல்களில் பட்டொளி வீசி பறக்கட்டும்..
~~ ~~. ~~. ~~

குடியரசு தினத்தில் பள்ளிவாசலில் தேசிய கொடி ஏற்றலாமா…?

2002 க்கு முன் வரை தேசியக் கொடியை இஷ்டப்பட்ட இடத்தில் யார் வேண்டுமானாலும் ஏற்ற முடியாதபடி தடை இருந்தது. ஆனால், 2002, ஜனவரி 26 முதல் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக்கொடி ஏற்றி மகிழலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை அடுத்து வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், பொது இடங்கள் என அனைத்து விழாக்களிலும், ஏன் நம் பள்ளிவாசல்களிலும் கொடியேற்றி மகிழலாம் நாம் …

அதன்படி இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய தேசத்தையும் இந்திய மக்களையும் நேசிக்கும் விதத்தில் நம் பள்ளி வாயில்களில் தேசியக் கொடியை ஏற்றி நாங்கள் மதத்தால் முஸ்லிம்கள்.. பிறப்பால் உணர்வால் இந்தியர்கள்.. என்று நமது தேசப்பற்றை இந்த உலகிற்கு உரக்கச் சொல்வோம்….

தேசியக் கொடியை பற்றி சில வரிகள்…

தேசியக்கொடி ஏற்றும் கம்பம் வெள்ளை நிறத்தில் இருப்பது அழகு..

தேசிய கொடியை சூரிய உதயத்திற்கு பின்புதான் ஏற்ற வேண்டும். அதேபோல, சூரிய அஸ்தமனம் ஆவதற்கு முன்பு அதாவது மாலை 6மணிக்குள் இறக்கி விட வேண்டும்…

தேசியக் கொடியை ஏற்றும் போது விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும் போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்தஅல்லது கசங்கிய கொடியைப் பறக்க விடக்கூடாது..

தேசியக் கொடியை ஏற்றி கொண்டிருக்கும்போது கூச்சலிடுவதோ , கோஷம் போடுவதோ கூடாது.

அதுபோல் நமது பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களில்
தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும் போது, வலப்பக்கமாக ஏந்திச் செல்லவேண்டும். மேலும் மற்ற கொடிகள் இருந்தால், அனைத்துக் கொடிக்கும் முன்பு நமதுதேசியக் கொடி இருக்கவேண்டும்.

தேசியக்கொடியை ஆடையாக அணிந்து வருவதோ, இடுப்பில் கட்டிக்கொண்டு வருவதோ, தோளில் துண்டை போல் போட்டுக்கொண்டு வருவதோ , அதை கிழிப்பதோ, எரிப்பதோ, காலில் போட்டு மிதிப்பதோ, இந்திய தேசத்தையே அவமானப்படுத்தும் தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும்..

நம் தேசியக்கொடி பயன்படுத்த முடியாதபடி கிழிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ அதை மண்ணில் புதைத்து விட வேண்டுமே தவிர குப்பையில் போடுவது கூடாது.

இன்று பள்ளிவாசல்களில் கொடி ஏற்றி முடிந்தவுடன்….

இந்திய தேசத்திற்காக ரத்தம் சிந்தி தன் உடலை இந்த மண்ணிற்கு உரமாக்கி , இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்த நம் முன்னோர்களின் வீர வரலாறுகளை இன்றைய இளைய சமூகத்திற்கு உரக்கச் சொல்லுங்கள்…

உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தன் தாய்நாட்டை நேசிக்கிற இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் துப்பாக்கிகளுக்கும், பிரிட்டீஷ்காரர்களின் பீரங்கிகளுக்கும், அஞ்சாமல் களங்கண்ட இந்திய தேசத்தின் வெளிச்சத்திற்கு வராத வரலாற்று பக்கங்களை உலகிற்கு உரக்க சொல்லுங்கள்..

திப்பு சுல்தானின் வீர மரணத்திற்கு பின்பு தான் “இந்தியா இனி எங்கள்தேசம்”. என்று தைரியமாய் , சப்தமாய் ஆங்கிலேயனால் சொல்ல முடிந்தது என்கிற திப்புவின் வீர வரலாற்றில் ஆரம்பித்து இன்று குடியரசு தினத்தன்று பட்டொளி வீசி பறக்கிற தேசியக் கொடியை வடிவமைத்து கொடுத்த இஸ்லாமிய பெண்மணி சுரையா அம்மாவின் தியாகம் வரை வளரும் தலைமுறைக்கு சொல்லிக்கொடுங்கள்….

நம்மை அந்நியர்கள் ஆக சித்தரிக்க முயல்கிற பாசிச சக்திகளுக்கு நம்மை அகதிகளாக ஆக்கத்துடிக்கிற அமித்ஷா அரசுகளுக்கு நாம் அந்நியர்கள் அல்ல.. இந்த இந்திய தேசத்தின் மைந்தர்கள். இந்திய விடுதலைக்காக வேண்டி எங்கள் முன்னோர்கள் மண்ணில் விதையாய் விழுந்தவர்கள் அதன் கிளையாய் இன்று இன்னொரு சுதந்திரத்திற்காக போராடும் இந்திய முஸ்லிம்கள் நாம் என்பதை இந்நாளில் உரக்கச் சொல்லுங்கள்….

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..

செய்யது அஹமது அலி . பாகவி

News

Read Previous

பெண் குழந்தைகள் தினம்

Read Next

சந்தேகம் என்னும் நோய்…!

Leave a Reply

Your email address will not be published.