சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன ?

Vinkmag ad
சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? சிறுநீரக நோய்களைக் கண்டறியும் சோதனைகள் யாவை?
உடலின் ‘கழிவுத் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும், சிறுநீரகங்கள் நமது உடலின் இன்றியமையாத உறுப்புகளுள் ஒன்றாகும்.  இரண்டு கருஞ்சிவப்பு நிற, அவரை வடிவ, உறுப்புகள், முதுகுத் தண்டை ஒட்டி அடிவயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இவை ஒரு நாளைக்கு 189 லிட்டர் (200 குவார்ட்ஸ்) இரத்தத்தை வடிகட்டுகின்றன. இவை, இரத்தத்திலிருந்து கழிவுகளையும், கூடுதலான நீரைச் சிறு நீராக மாற்றியும் வெளியேற்றுகின்றன. இரத்தத்தை வடிகட்டும்பொழுது சோடியம், பொட்டாசியம், கால்சியம், குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள்  போன்ற வேதிப்பொருட்களை இரத்தத்திலிருந்து மீட்கின்றன. உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம்  அளவைச் சமன்படுதுகின்றன. சிறுநீரகங்கள் உருவாக்கும் ஹார்மோன்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், எலும்பு மஜ்ஜையைத் தூண்டி, சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன.
மார்ச் 14-ம் தேதி உலக சிறுநீரக தினம் (world kidney day). உலக சிறுநீரக தினம் என்பது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான, சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை நீண்டகால சிறுநீரக நோய்க்கான (Chronic Kidney Disease (C.K.D) முக்கிய ஆபத்து காரணிகள் என்பதை உலக நீரழிவு தினம் வலியுறுத்துகிறது.

News

Read Previous

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது

Read Next

பெண் குழந்தைகள் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *