நான் நீ நாம்

Vinkmag ad

நான் நீ நாம்

 

நான்

என்ற சொல்

நாவினில் விதைக்காதீர்

நாம்

என்ற சொல்

நாவினில் விதையுங்கள்

 

நான் என்ற பாரம்

தலைக்கு ஏற்றினால்

வீழ்வது

நாம் இல்லை

நீ என்பதை உலகம்

இன்னும் உணரவில்லை

 

நான் என்ற சொல்

உதட்டைப் பிரிக்கும்

பகைக்காரன்

நாம் என்ற சொல்

உதட்டை இணைக்கும்

ஒற்றுமைக்காரன்

 

நான் என்றால்

மனிதர்களின்

ஆங்காரம்

நாம் என்றால்

மனிதன் அறிவின்

அலங்காரம்

 

நான் என்றால்

பகையின் அடையாளம்

நாம்  என்றால்

ஒற்றுமையின்

சின்னம்

 

நான் என்றால்

இமைகள் கூட

பிரிந்து இருக்கும்

நாம் என்றால்

இமைகளும் அழகாய்

உறங்கும்

 

நான் அடையாளம்

மனிதன் பிரிந்து கிடக்கிறான்

நாம் என்ற

அடையாளம்தான்

பட்சிகளின் ஒற்றுமையின்

சிகரமாய் விளங்குகிறது

 

நான்  என்றால்

இல்லறம் கசக்கும்

நாம் என்றால்

இல்லறம் இனிக்கும்

 

நான் என்ற சொல்

குத்துப்பட்டு கிடக்கும்

நாம் என்ற சொல்

அரவணைத்துக்கொண்டே

இருக்கும்

 

நான் என்றால்

ஆலமரம் கூட வீழ்ந்திருக்கும்

நாம் என்றதனால்தான்

மரம் செடி கொடி காய் கனி என

விருட்சம் பெறுகிறது

விருட்சம் பெறுகிறது

 

என்றும் அன்புடன்.

ரா. .ந.ஜெயராமன் ஆனந்தி

கீழப்பெரம்பலூர்

News

Read Previous

மாரி…!

Read Next

விடியலும் வந்தே சேரும் !

Leave a Reply

Your email address will not be published.