நபி (ஸல்) …………….

Vinkmag ad

நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்

 

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்

                 தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

 

 

 

  • அங்கே

ஒவ்வொருவருக்கும்

ஒரு குல வழிபாடு இருந்தது!

ஆம்

அங்கே

பல தெய்வ வழிபாடு இருந்தது!

 

  • கவிஞர்கள்

அங்கே அன்பை பேசவில்லை!

அம்பு வீச சொன்னார்கள் !

படிக்க சொல்லவில்லை!

குடிக்க சொன்னார்கள் !

மதி வளர்க்கச் சொல்லவில்லை

மது குடிக்கச் சொன்னார்கள்!

 

  • அந்தப் புரங்கள்தான்

நகர்புறங்களை விட

வளர்ச்சிப் பெற்றிருந்தன!

 

  • பேரரசுகள்

மக்களின் வாழ்க்கையைப்பற்றி

கவலைப்படவில்லை !

அவர்களிடம்

வாள் கையில்

எப்போதும் இருந்தது !

 

  • வேட்டையாடுவது

அவர்களின் வீரத்தைக் குறிக்கும் !

கோட்டையில் கும்மாளமிடுவது

இதயத்தில் ஈரத்தைக் குறிக்கும் !

 

  • பக்கத்து நாடு

எப்போதும் பகை நாடு !

படையெடுப்பது

அவர்களுக்கு உடையேடுப்பது போல !

 

  • கவிஞர்களின்

வைரவரிகள் !

அரசர்களின்

வைரங்களுக்காக எழுதப்பட்ட வரிகள் !

 

  • அறிஞர்களின்

பொன் வரிகள்!

அரசர்களின் பொன்னுக்காக எழுதப்பட்ட வரிகள் !

 

  • யூத சமூகம்

மனித குல விரோத சமூகமாக இருந்தது !

 

  • மதகுருமார்கள்

படிச்சுக் கொடுத்ததை விட

முடிச்சுப் போட்டதுதான் அதிகம் !

மக்களின் உழைப்பு !

அவர்களின் வயிற்றுப் பிழைப்பு !

 

  • மக்கள்

மனோதிடத்தை விட

ஜோதிடத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்திருந்தனர்!

எச்செயலையும் நெறிப்பார்த்து அல்ல

“குறி “ பார்த்தே தொடங்கினர் !

 

  • வேதங்கள்

முடிந்த அளவு திருத்தப்பட்டது !

மதகுருமார்களுக்கு

வேண்டியது சேர்க்கப்பட்டது !

 

  • உண்மை சொல்ல வேண்டிய வேதங்கள்

பொய் சொல்ல ஆரம்பித்தன!

பொய்யை உண்மையென்று

ஆலயங்கள் அங்கீகரித்தன !

 

  • கருப்பு நிறம்

வெறுப்பு நிறமாகக் காட்டப்பட்டது !

சிவப்பு நிறம்

சிறப்பான நிறமாகக் காட்டப்பட்டது!

 

  • எங்கும்

சாதி சகதியாய் இருந்தது !

சமூகத்தில்

அநேகருக்கு அவமானமும் அவதியுமாய் இருந்தது !

 

  • விலங்குகளைக்கூட

புனிதமாக கருதினர் !

விளங்காத மனிதர்கள்

தம் இனத்தை  இழிவாகக் கருதினர் !

 

  • உயர்ந்த சாதி

பாவங்கள் செய்தாலும் பரிசுத்தம்!

தாழ்ந்த சாதி பிறக்கும் போதே அசுத்தம் !

 

  • விலங்குகளின் சிறுநீர் புனிதம்!

மனித உமிழ் நீர் அசுத்தம்!

இரட்டைக்குவளைகள்!

 

  • அசுத்தப்படுத்தபவர்கள்

சுத்தமானவர்களாம்!

சுத்தப்படுத்தபவர்கள்

அசுத்தமானவர்களாம்!

சாதி கொடுமைகள் !

 

  • ஆசைப்படக்கூடாது என

மதகுருமார்கள் பேசினர்

மக்களிடம் காசை வாங்கிக்கொண்டு!

வேசியிடம் போகக்கூடாது என

அவர்கள் பேசினர்

தாசிகளை வைத்துக் கொண்டு !

 

  • பெத்தெடுக்க தாயாய்

பெண் தேவைப்பட்டாள்!

கணவன் செத்து விட்டால்

தீயில் எறியப் பட்டாள்!

 

  • பெண் குழந்தை பிறந்தவுடன்

தாய்ப்பாலுக்கு பதில்

கள்ளிப்பால் கொடுக்கப் பட்டது !

மண்ணில் வாழவந்த பெண் குழந்தை

உயிரோடு

மண்ணில் புதைக்கப் பட்டது !

 

  • கவிஞர்கள்

பாட்டு அடிகளில்

பெண்ணை நிர்வாணப்படுத்தினர் !

காபாவைச் சுற்றி கடவுளின் பெயரால் ஆடையில்லாமல்

அவளை வரச் செய்து அவமானப்படுத்தினர் !

 

  • ஏழாம் நூற்றாண்டு

எட்டுத்திக்கும்

மகத்தான ஒரு மனிதரின் வருகைக்காக

காத்திருந்தது!

ஏதோ மாற்றாமல்

விட்டு வைக்கப் பட்டிருந்த வேதங்களின் சில பக்கங்கள்

அந்தப் புனிதரின் வருகையை

முன்னே அறிவித்திருந்தன!

 

  • உலகம்

நன்மையைத் தேடிப் புறப்பட்டது !

உண்மையைத் தேடி மனிதர்கள்

அங்கு வந்து கொண்டிருந்தனர் !

 

  • இரத்தங்களாலும் யுத்தங்களாலும்

சிவப்பாயிருந்த பூமி

அமைதியை நோக்கி சிந்திக்க தொடங்கியது!

 

  • அறிவீனத்துடன்

அனைத்துக்கு முன்னும் மண்டியிட்ட சமூகம்

அறிவுப்போருக்கு தயாரானது !

 

  • நரகத்திற்குச் செல்லும் எண்ணிக்கை

பூமியில் குறைய ஆரம்பித்தது !

சுவனம் செல்ல

முன் பதிவுச் செய்யப்பட்டது !

 

  • அழகிய மக்கா நகரம்

ஏகத்துவத்தின் புனர் நிர்மாணத்திற்கு

தயாரானது !

அறியாமக்களால்

வைக்கப்பட்டிருந்த சிலைகள்

அகற்றப்படும் நாள் நெருங்கியது !

 

  • அவரது வருகையை அறிவிக்கவே

நான் வந்தேன் என

இயேசுவின் முன்னறிவிப்பை

பேசத் தொடங்கியது கிறிஸ்தவ சமூகம் !

 

  • உன்னைப்போல் ஒருவரை

பாரான் மலையில் எழுப்புவேன்

சினாய் மலையில் தேவன் மோசேயிடம் பேசியது

சிந்தித்துப் பார்த்தது யூத சமூகம் !

 

  • கிழக்கின் வேதங்களும்

அவரின் அடையாளத்தை

அழகாக பேசின!

ஆழமான பேசின!

 

  • போராட்டங்கள் இல்லாமல்

உலகம் விடுதலைக்குத் தயாரானது!

கோரிக்கை வைக்காமல்

உரிமைகள் அனைவருக்கும் கொடுக்கப்பட போகிறது !

 

  • அரக்கத்தனத்தால்

அடிமைப்படுத்திய அரசர்கள்

அச்சப்பட்டார்கள்

ஆட்சி வீழப் போகிறது என !

மூடத்தனத்தால்

ஏமாற்றிய புரோகிதர்கள்

வயிற்று எரிச்சல் பட்டார்கள்

வயிற்றுப் பிழைப்பு

போகப் போகிறது என !

 

  • இறைத்தூதர் ஈஸா

விண்ணில் ஏற்றப்பட்டு

ஐந்நூறு ஆண்டுகள் கழிந்தது !

இறுதி இறைத்தூதர் முஹம்மது

மண்ணில் தோன்றப்போகும் நாள்

நெருங்கி வந்தது !

  • ஆம் !

ரபியுல் அவ்வல் மாதம்

திங்கட்கிழமை காலை

பலித்தது வேதங்களின் முன்னறிவிப்பு

மக்கா மாநகரில்

நிகழ்ந்தது

மாநபி  முஹம்மது (ஸல்) அவர்களின்

பிறப்பு !

–   தொடரும்

–  ******************************************************************************************************

News

Read Previous

பயிர் இன்சூரன்ஸ் தொகை வெளியிடாத சங்கங்கள்

Read Next

தென்றல் சிறுகதைப் போட்டி

Leave a Reply

Your email address will not be published.