பயிர் இன்சூரன்ஸ் தொகை வெளியிடாத சங்கங்கள்

Vinkmag ad
முதுகுளத்தூர்: பயிர் இன்சூரன்ஸ் தொகை பெறும் பயனாளிகள் பட்டியல்களை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டாததால், ஒதுக்கீடு தொகை எவ்வளவு என தெரியாமல், விவசாயிகள் குழப்பத்தில்  உள்ளனர்.
முதுகுளத்தூர் தாலுகாவில் 20 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ரூ.23 கோடி, கடலாடியில் 9 சங்கங்கள் மூலமாக 13 கோடி, கமுதியில் 32 சங்கங்கள் மூலமாக 19 கோடி, 2011-12ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட நெல் விவசாயத்திற்காக, பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் இன்சூரன்ஸ் தொகை பட்டுவாடா
செய்யப்பட்டு வருகிறது. இந்த தாலுகாக்களில் எந்த கூட்டுறவு சங்கத்திலும் பயனாளிகளின் விபரம் வெளியிடப்படவில்லை. ஒதுக்கீடு செய்யபட்ட தொகை, கிராமவாரியாக மாறுபட்டுள்ளது.
தொகை தெரியாமல், விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”கூட்டுறவு சங்க விளம்பர பலகையில், பயனாளிகள் விபரத்தை தெரிவிக்க, வங்கி நிர்வாகங்களிடம் வலியுறுத்தியுள்ளோம். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் தொகையில், கூட்டுறவு சங்க நிர்வாகங்கள் கட்டாய கமிஷன் கேட்டால், புகார் தெரிவிக்கலாம். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்
படும். தவறுகளை களைய தனிக்குழு அமைக்கபட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார்.

News

Read Previous

ஹரி டிராவல்ஸ் திருநாவுக்கரசு மரணம்

Read Next

நபி (ஸல்) …………….

Leave a Reply

Your email address will not be published.