சிரிக்கப் பழகவேணும்!

Vinkmag ad

காலையில் அழலாமோ பாப்பா?

******************(கவியோகி வேதம்)

அழுது புரளாதே பாப்பா!-காலையில்

..அழுது புரளாதே!

அழுது புரள்கிறதா மைனா-உன்போல்

..அரற்றித் திரிகிறதா?..(பாப்பா!அழுது..)

..

காலை எழுந்ததும் பாப்பா!-வெளியில்

..காற்றை நுகர்ந்திடடீ!

தோலுக்கு நல்லதடீ -பாப்பா!

..துணிச்சல் கொடுக்குமடீ!

..

காலையில் மாமரக் குயில்கள்பார்!-அழகாய்

..கானம் இசைக்குது பாரடீநீ!

சோலையில் உள்ள பறவையெல்லாம்-ஆகா!(பாப்பா!)-

..சுற்றிவிளை யாடுதடீ!

.

தூங்கி எழுந்ததும் அழலாமோ?-பாப்பா!

..துக்கிரி என்றுனை அழைப்பரடீ!

வாங்கிக் குடித்துப்பாலை,- பின்பு

..வாசலில் பறவைகள்பார்!

.

மயில்கள் ஆடுதல்பார்!தெருவில்-பசுவும்

..மகவுக்கு ஊட்டுதல்பார்!

ஒயிலாய்க் கோழிக.ளும் அதோ!-குப்பையில்

..உணவைத் தேடுதல்பார்!

..

நாய்களும் வால்குழைத்து வந்தே-உன்னிடம்

..நல்ல’பிஸ்கட்’ கேட்கலையோ?

பாய்கிற ஆட்டுக்குட்டி-உன்றன்

..பாதத்தை நக்கலையோ?

..

படுக்கையை விட்டெழுந்து பாப்பா!-நல்ல

..பழக்கமே கொள்ளவேணும்!

துடுக்குத் தனம்-விட்டுநீ-என்றும்

.. சிரிக்கப் பழகவேணும்!-பாப்பா!

..சிரிக்கப் பழகவேணும்!

****************(கவியோகிவேதம்)

News

Read Previous

தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்

Read Next

செந்தமிழ் நாடெனும் போதினிலே

Leave a Reply

Your email address will not be published.