கவிதை

Vinkmag ad

சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் இறந்து போன 

கன்னட மொழிக் கவிஞர் சித்தலிங்கையாவின் கவிதை ஒன்று...

 

நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள்.

உங்கள் கதறல் எனக்குக் கேட்காது.

என் வலிக்கு இப்போதே வருந்த முடியாதா?

 

நீங்கள் பூமாலை சாத்துவீர்கள்.

என்னால் முகர முடியுமா என்ன?

அழகான பூவொன்றை இப்போதே

கொடுக்க முடியாதா?

 

என்னைப் புகழ்வீர்கள்

எனக்குக் கேட்குமா சொல்லுங்கள்.

ஓரிரு வார்த்தை இப்போதே

புகழ்ந்தால் குறைந்தா போவீர்கள்?

 

என் தவறுகளை மன்னிப்பீர்கள்

நான் உணராமலே போவேன்.

ஜீவன் இருக்கும் போதே

மன்னிக்க முடியாதா?

 

நான் இல்லாத குறைக்கு வருந்துவீர்கள்.

எனக்குத் தெரியாமலே போகும்.

இப்போதே சந்திக்கலாமே.

 

என் மரணச் செய்தி கேட்டவுடன்

வீட்டுக்கு ஓடி வருவீர்கள்

இரங்கல் சொல்வதற்கு..

இப்போதே நலம் விசாரிக்க முடியாதா?

 

பறந்து போகும் முன்னே

பகிர்ந்து வாழ்வது மேலல்லவா..?”

News

Read Previous

மருத்துவக் கல்லூரி

Read Next

காற்றும் வெளிச்சமும் தேவை வகுப்பறைக்குள்

Leave a Reply

Your email address will not be published.