மருத்துவக் கல்லூரி

Vinkmag ad

டாக்டர் (MBBS) படிக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளின் (Medical College) பட்டியலைப் பலர் கேட்டு வருகின்றனர்.

குறிப்பாகப் பெண் பிள்ளைகளை MBBS படிக்க வைக்க முஸ்லீம்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் பல பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காக அதன் விபரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடையாது. எனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் தான் படிக்க வைக்க வேண்டும்.

கேரளாவில் உள்ள இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகள் :

1. Azeezia Institute of Medical Sciences and Research, கொல்லம்
2. KMCT Medical College, கோழிக்கோடு
3. Karuna Medical College, பாலக்காடு
4. MES Academy of Medical Sciences, மலப்புரம்
5. DM WAYANAD INSTITUTE OF MEDICAL SCIENCE, வயநாடு
6. Al-Azhar Medical College and Super Specialty Hospital, தொடுப்புழா (இடுக்கி மாவட்டம்)
7. Kannur Medical College, கண்ணூர்

கர்நாடகாவில் உள்ள இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகள் :

1. Al-Ameen Medical College, பிஜாபூர்
2. Khaja Bandanawaz University, குல்பர்கா
3. Kanachur Institute of Medical Sciences, மங்களூர்
4. Yenepoya Medical College, மங்களூர்

இது போக ஆந்திராவில் 2 மருத்துவக் கல்லூரியும், தெலுங்கானாவில் 4 மருத்துவக் கல்லூரியும் இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

மருத்துவ கல்வி பற்றி தமிழக முஸ்லீம்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே இங்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட முஸ்லீம்களால் துவக்கப்பட வில்லை.
மருத்துவ கல்வி மட்டும் இல்லை, IAS/IPS/IFS/IES போன்ற உயர் அரசு பதவி, IIT/NIT/IIM/IISc போன்ற உயர் கல்வி நிலையங்களில் படிப்பது என உயர் கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு தமிழக முஸ்லீம்களிடம் போதிய அளவு இல்லை.

மாணவ மாணவிகள் படிக்க, படிக்க வைக்க இந்த விபரங்களைத் தீர்க்கமான முயற்சியுடன் ஈடுபடுங்கள்.

இன்று குற்றம் கண்டு தூற்றும் செயலில் உள்ளவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு மருத்துவம் கற்றவர்கள் பின் நாளை வரப்போவது வருவது தெரிந்த கதைதான்.

தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் கூட்டுச் சேர்ந்து ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவ முன் வந்து முயற்சி செய்யுங்கள்.

மக்களுக்காக, சமுதாயத்திற்காக, நமக்காக, நம் எதிர்காலத்திற்காக ஊக்கம் உள்ள உள்ளங்களை எதிர் பார்க்கிறோம்.

News

Read Previous

மௌனத்தின் சாவிகள்

Read Next

கவிதை

Leave a Reply

Your email address will not be published.