எண்ண அலைகள் !

Vinkmag ad

எண்ண அலைகள் !

— கவிஞர் சீர்காழி இறையன்பனார்

 

உருண்டை உலகின்

இருண்ட வாழ்வு

இடுக்கண் கொள்வதா ?

சுரண்டல் இல்லா

சுகவாழ்வு

சோபிக்க வேண்டாமா !

இன்னல்கள் இடுக்கண்கள்

சூதுடன் வாதும் சேர்ந்தார்

சொன்னதைச் செய்திட

முனைந்திட வேண்டுமா ?

 

 

கல்லறை சில்லரைக்

காசுக்குக் கண்விழித்தால்

வறுமையை மெய்ப்படுத்தும்

வழியாகும் அல்லவா ?

நதியும் பரியும்

நட்பு கொண்டால்

வரியின் புலியும்

வெறிகொண்டால்

காடு என்னாகும் ?

நாடு என்னாகும் ?

மிஞ்சும் சஞ்சலம்

வஞ்சம் தஞ்சம் கொள்ளாது

அஞ்சும் சுகம் கெஞ்சும்

உலகம் நஞ்சாய் வெறுந்திடுமே !

கற்பூர ஒளி

உலகப் பிரகாசம்

பூத்து மகிழ்ந்திடுமே !

அற்புதம் ஆனந்தம்

அணிவகுத்து நிலவிடுமே !

நாடு முன்னேறச்

சுடரும் ஒளிதீபம்

புகழ் மேவத்

தேடும் நன்மை

கூடும் உயர் யாவும்

நாளும் போற்றிடுமே !

 

மனம் மெய்வாக்கு

மேன்மையின் போக்கு

தினம் உருவாகித்

தெளிவு தேடும்

கருவாகுமே !

தவநிலை கொண்டு

பவநிலை விரட்டும்

அவலநிலை அகற்றும்

அகத்தூய்மையாகுமே !

 

ஆலையில் பிழிந்த கரும்பு

ஆரமுதாய் சுவைத்தேனாய்

அழகு நிலவாகுமே !

எண்ண அலைகள்

எட்டாத் தொலையாகும் !

எழுத்தின் எல்லை

ஏற்றத்தின் முல்லையாகும் !

பக்திக்கு முக்தி அமுதம்

பட்டினிக்குக் கூழ் அமுதம் !

புல்லுக்குப் பனியமுதம்

புத்திக்கு அறிவமுதம் !

 

கவலையைக் கருத்தில் கொண்டு

கண்ணீரைக் கைவசமாக்காதே !

சுமைகள் தாங்கும் சுமை தாங்கி

சுகம் தரும்

புன்னகை முகம் தரும்

பூத்திடச் சுகம் தரும் !

கனியும் கருணை

உணர்வு ஒன்றே

மனித குலத்தில் மலரட்டும் !

மனதில் என்றும் வளரட்டும் !

அழுது தொழுது

பழுதிலா நன்மை பெற்றிடவே

முழுமுதல் பொருளை

அருளைப் போற்றிடுவோமே !

 

 

நன்றி : இனிய திசைகள்  – பிப்ரவரி 2015

 

News

Read Previous

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்…

Read Next

நம்பிக்கையொளியில் ……

Leave a Reply

Your email address will not be published.