இனியவை பேசு

Vinkmag ad

இனியவை பேசு 

 
இஸ்லாமியர் என்றும்  இனிதே நாள் துலங்க
அஸ்ஸலாமு அலைக்கும் என்றே அன்போடுதானுரைப்பார்.
நல்லவை நடக்குங்கால்  அல்லாஹ்வின் கருணை என்னும்
மாஷா அல்லா என்றே மனமாரத் தொழுதுரைப்பார்.
அல்லாஹ்வை நடந்தாலும் அல்லாஹ்வின் விருப்பமென்னும்
இன்ஷா  அல்லா என்று   இன்முகத்துடன்தானுரைப்பார்.
அண்ணல் நபியவர்கள் இன்னலுற்ற ஏழைக்குதவி செய்து
இன்சொல் பகர்பவர்க்கே சுவனமுண்டென்றுரைத்தார் .
இதனை உணர்த்திடவே  புனித ரமலான் மாதத்தில்
ஏழைகட்குணவளித்து , இன்சொல்  கூறச்சொன்னார் .
இன்சொல் விளைநிலாமா ஈதலே வித்தாகவென
நல்லோர் நல்லுரையில் திருத்தக்க தேவர் சொன்னார்.
இனிய உளவாக இன்னாத கூறல் பற்றி
முனிய  உரைத்துள்ளார்   முன்னாளில் வள்ளுவரும்.
முத்தேர் முறுவலார்  சொல்லினிதாங்கினிதே என்று
இனியவை நாற்பதில் பூதஞ்சேந்தனார் தானுரைத்தார் .
இனியதே பேசுவதால் இதயம் இலகுவாகும்.
இனியவை  பேசுதலால் இதயங்கள் வசமாகும்.
இனியவை பேசுதலால் முகமென்றும் அழகாகும்.
இனியவை பேசுதலால் இன்னல்கள்  மறைந்துவிடும்.
இனியவை பேசுதலால் பகைமைகள்  பறந்தோடும்.
இனியவை பேசுதலால் இவ்வவயம்  புகழ்பாடும்.
இனியவை பேசுதற்கு எச்செலவும் இல்லையன்றோ .
எண்ணங்கள் இனிதானால்  இனிய சொல் உருவாகும்.
இனிய சொல் உருவானால் இனியதே நடந்து வரும். .
இனியதே நடந்துவந்தால் இவ்வாழ்க்கை   சுகமாகும்.
இவ்வாழ்க்கை  சுகமானால் சுவனமே  இங்குவரும். .
புனித ரமலான் வாழ்த்துக்களுடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
5.5.2021

News

Read Previous

பரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் !

Read Next

மீனு கறி

Leave a Reply

Your email address will not be published.