இதுதான் உறவா ?

Vinkmag ad

இதுதான் உறவா ?
“””””””””””””””””‘”””””'””””””””” பிறர் துன்பத்தை
தனதாக கருதினோம்.
இடரில் துணையானோம்.
உள்ளம் சோர்வுற்றதும்
உறுதுணையாய் இருந்தோமே
மறந்தது யார்?
தாயாக தந்தையாக
பாசம் காட்டினோமே
பணமும் புகழும் வந்ததும் மனிதர்கள்
வந்த பாதையை
மறந்தது யார்?

பசியில் சேர்ந்து
வறுமையில் வாடியதும்
பழைய கதையானது.
குளிரில் போர்வையாய்
வெயிலுக்கு குடையாய்
இருந்ததும் மறந்திடுச்சி…
உறவும் ,உதிர உறவும்,
உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசும்
அரிதாரமுகமாச்சு…
உண்மையாய் நேசிக்கும்
உறவு தான் யார்?

கலியுகம் என்கிறார்களே? காலானாக தொற்று வந்ததே
காரணமாய் அமைந்ததா?
கானல் நீராய். தெரிகிறது.
காலம் காலமாக
போற்றி வளர்த்த
பாசமான ,நேசமான
உறவுகள் பாதை மாறி செல்ல காரணமாகுமா?
இதுதான் உறவா?

சிந்தித்ததில். தோன்றியது,
தஞ்சை. ந.இராமதாசு
எழுத்தாளர்.

News

Read Previous

நல்லவன்

Read Next

பாரதிதாசனின் குடும்ப விளக்கு

Leave a Reply

Your email address will not be published.