அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம்

Vinkmag ad

அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம்.

 

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோதுஅவர் தமிழகத்தில் இருக்கும் குன்னூருக்கு விஜயம் செய்து இருந்தார். அப்போது பீல்ட் மார்ஷல் சாம் மானேக்சா அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவருக்கு தெரிய வந்ததுள்ளது.

 

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நிகழ்ச்சிகளில் திட்டமிடப்படாத நிலையில் கூடபீல்ட் மார்ஷல் சாம் மானேக்சாவை மருத்துவமனையில் சென்று பார்க்க விரும்பினார். நேரம் இல்லாத நிலையிலும் அதற்கான ஏற்பாடுகள் உடனே செய்யப்பட்டன.

 

மருத்துவமனை சென்ற அப்துல் கலாம் அவர்கள்மானெக்சாவை சந்தித்து அவரின் உடல்நலம் பற்றி விசாரித்துஅவருடன் சுமார் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார்.

 

பின் அப்துல் கலாம் மருத்துவமனையிலிருந்து புறப்படுவதற்கு சற்று முன்புமானெக்சாவிடம் “நீங்கள் இங்கே வசதியாக இருக்கிறீர்களா.நான் வேறு ஏதேனும் உதவி தங்களுக்கு செய்ய வேண்டுமா.உங்களுக்கு ஏதேனும் இங்கே குறை இருக்கிறதா.அல்லது வேறு ஏதேனும் வசதி இங்கே உங்களுக்கு செய்து தர வேண்டுமா..என கேட்டுள்ளார்.

 

அதற்கு மானெக்சா, “ஆமாம் Your Excellency, எனக்கு இப்போது ஒரு குறை உள்ளது என கூற,  அதிர்ச்சி அடைந்த கலாம் அவர்கள்மிகுந்த வேதனையின் கவலையோடுஎன்ன ஏது என அவரிடம் கேட்டுள்ளார்.

 

அதற்கு மானெக்சா, “ஐயாஎன் மனக்குறை என்னவென்றால்என்னால் இப்போது எழுந்திருக்க முடியவில்லை…அதனால் நான் மிகவும் மதிக்கும் என் அன்பான நாட்டின் மிகவும் மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்குஎழுந்து நின்று சல்யூட் செலுத்த முடியவில்லை என்பதை குறையாக கூறஅப்துல் கலாம் மிகவும் நெகிழ்ந்து போய்கண்ணீரோடு மானெக்சாவின் கையை பிடித்து கொண்டு மரியாதையோடு ஆறுதல் கூறியுள்ளார்.

 

ஆனால் இந்த சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சியின் மீதமுள்ள பகுதி என்னவென்றால்மானெக்சா, ஏபிஜேவிடம்கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஃபீல்ட் மார்ஷலின் தரத்தின் ஓய்வூதியம் தனக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

 

இதில் அதிருப்தி அடைந்த ஜனாதிபதி அப்துல் கலாம்டெல்லி சென்ற பிறகுஒரு வாரத்திற்குள் மானெக்சாவுக்கு சேர வேண்டிய ஓய்வூதியத்தை நிலுவை தொகையுடன்கிட்டத்தட்ட ரூ 1.25 கோடிக்கான காசோலையை ஏற்பாடு செய்துநோய்வாய்ப்பட்டு ஊட்டியின் வெலிங்டன் மருத்துவ மனையில் இருந்த மானெக்சாவிடம்பாதுகாப்பு செயலாளர் மூலம் சிறப்பு விமானத்தில் நேரிடையாக கொடுக்க அனுப்பினார்.

 

இதுதான் அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம். அதனால்தான் அவரை அனைவரும் தலை மேல் தூக்கி கொண்டாடுகிறோம்.

 

பின்னர் காசோலையை நன்றியோடு பெற்று கொண்ட பீல்டு மார்ஷல் மானெக்சா, தனக்கு கிடைத்த ஓய்வூதியத் தொகையான ரூ 1.25 கோடியையும்உடனடியாக இராணுவ நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்து விட்டார்.

 

இதுதான் பீல்டு மார்ஷல் மானெக்சாவின் மகத்துவம்.

 

இப்போது நாம் யாருக்கு வணக்கம் செலுத்துவது.?

 

உண்மையில் இப்படியான மகத்துவமானவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த வரம்.

 

இவர்களைப் போன்ற தன்னலமற்ற உண்மையான ஹீரோக்களை நாம் நினைவில் வைப்போம்..

(வாட்ஸ்அப்பில் கிடைத்த தகவல்)

News

Read Previous

சுமை

Read Next

சேவைச் செம்மல் விருது

Leave a Reply

Your email address will not be published.