விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை முஸ்லிம்களுக்கு பயன் தருமா?

Vinkmag ad
                               (கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்)
கடந்த ஜூன் 2-ம்தேதி சென்னையில் கூடிய திமுகவின் உயர்மட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிக முக்கியமானதாக,விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த செய்தி மீடியாவில் வந்ததுமே,நமது சகோதரர்களும் முஸ்லிம்லீக் உள்ளிட்ட ஒருசில இயக்கங்களும் திமுகவை பாராட்டியது மட்டுமல்லாமல்,இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தான் இந்திய அரசியலில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றெல்லாம் பக்கம்,பக்கமாய் தமது இணையதளங்களில் எழுதி வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடப்பது உண்மையென்றாலும்,நாம் நினைப்பது போல் ஜாதி,மதம் ரீதியிலான விகிதாச்சாரமல்ல அது.
குறிப்பாக அமெரிக்காவில் ஜனநாயக கட்சி,குடியரசு கட்சி,சோஷலிஸ்ட் கட்சி என்று மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன.இதில் எந்த கட்சிக்கு அதிக சதவீதம் வாக்குகள் கிடைக்கிறதோ?அந்த கட்சியை சேர்ந்தவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்கிறார்.
அவரே தமது கட்சியின் சார்பில் எம்பிக்களை நியமனம் செய்வார்.
அடுத்தடுத்த சதவீத வாக்குகளை பெற்ற கட்சிகள் தங்களுக்கான கட்சி எம்பிக்களை நியமனம் செய்து கொள்வர்.
மொத்தத்தில் கட்சி ரீதியிலான வாக்கு பதிவாக இருக்குமே தவிர,ஜாதி ரீதியிலான வாக்கு பதிவல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்ற நாடுகளை போல இந்தியாவிலும் விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டால்….காங்கிரஸ்,பாஜக,திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தங்களுக்குரிய வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் உறுப்பினர்களை பெற்றுக்கொள்வர்.
ஆனால் மொத்த இந்தியாவிலும் 13%சதவீதமாகவும்,தமிழ்நாட்டில் 6.5%சதவீதமாகவும் இருக்கும் முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் SDPI,முஸ்லிம்லீக் என்ற இரண்டு கட்சிகளும்,பல்வேறு மாநிலங்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு மாநில அளவிலும் 75 கட்சிகளும் போட்டியிட்டால்…பூஜ்ஜியமே விடையாக மிஞ்சும்.
வன்னிய மக்களின் ஒற்றுமையில் பாமக கூட ஒரு சில இடங்களை பெற்றுவிடும்.ஆனால் முஸ்லிம்களின் பிளவுகளால் நமக்கு ஒருஇடம் கூட கிடைக்காது என்பதே எதார்த்தம்.
23.5%சதவீத வாக்குகளை பெற்றும் கூட ஒரு எம்பியை  பெறமுடியவில்லையே..? என்பது தான் கலைஞரின் ஆதங்கம்.
கலைஞரின் கோரிக்கையில் ஒரு நியாயமும் உண்டு.31%சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள பாஜக 282 எம்பிக்களை பெற்றிருப்பது ஆரோக்கியமான ஜனநாயகமில்லை என்பதுதான்.
விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் பாஜக பெற்றுள்ள 31%சதவீத வாக்குகளுக்கு 181 எம்பிக்கள் மட்டுமே கிடைத்திருப்பர்.மோடி பிரதமராகி இருக்க முடியாது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் திமுக பெற்றுள்ள 23.5%சதவீத வாக்குகளுக்கு 8 எம்பிக்கள் கிடைத்திருப்பர்.எப்படியும் திமுகவின் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் நுழைந்திருப்பார்கள் என்பது தான் கலைஞரின் கவலை.
அதனால் தான் இப்போது விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்கிறார் கலைஞர்.
கண்ணியத்தென்றல் காயிதேமில்லத் பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை அப்போதே திமுகவும்,காங்கிரஸும் ஆதரித்து நடைமுறை படுத்தி இருந்தால்..முஸ்லிம் சமூகம் இத்தனை கூறுகளாக பிரிந்திருக்க மாட்டார்கள்.
முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாத ,பாராளுமன்ற சட்டமன்றங்கள் இருந்திருக்காது.
ஒருவேளை விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்தப்பட்டால்….திமுக,அதிமுக,காங்கிரஸ் போன்ற பிற கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிக்கு ஓட்டு போட்டு விடுவார்களா?
அல்லது இந்தியா முழுவதும் ஒரே குடையின் கீழ் அனைத்து முஸ்லிம்களும் இணைந்து விடுவார்களா?இதுபோன்ற பல்வேறு இடியாப்ப சிக்கலை வைத்து கொண்டு,கலைஞரின் சுயநல அரசியலுக்கான கோரிக்கையை நாம் தலையில் தூக்கி சுமப்பது சரிதானா?என்பதை உங்களின் கருத்துக்கே விடுகிறேன்.
உங்களின் கருத்துக்களையும் பதிவிடுங்கள் நியாயம் என்றால் நானும் ஒப்புக்கொள்கிறேன்!
குறிப்பு:உங்களின் மேலான பதிவுகளை jahangeerh328@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

News

Read Previous

மண்டல தடகள போட்டி முதுகுளத்தூர் ஐடிஐ மாணவர்கள் வெற்றி

Read Next

முதுகுளத்தூரில் கால்நடை பராமரிப்பு முகாம்

Leave a Reply

Your email address will not be published.