பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்களின் பிறந்த நாள் நினைவலைகள்

Vinkmag ad

” ஆகட்டும் பார்க்கலாம்”

பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்களின் பிறந்த நாள் நினைவலைகள்
————————————–

ஒருமுறை கவிஞர் திரு.எஸ்.டி.சுந்தரமும் தியாகி திரு. நெல்லை ஜெபமணி அவர்களும் பெருந்தலைவரிடம் ” ஐயா பள்ளிக்கூடம், சாலைகள், அணைகள், தொழிற்சாலைகள், மதிய உணவத்திட்டம், இலவச கல்வி கொண்டு வந்திருக்கோம் நமது ஆட்சியில் இத மக்களிடையே தெரிய படுத்த ஒரு விளம்பர படம் எடுக்கனும் ஒரு மூன்று லட்சம் போதும் என்றனர் ….

மூன்று லட்சத்தில் பத்து பள்ளிக்கூடம் கட்டிரலாம்னேன் , செய்தது கடமை அத வெளிச்சம் போட்டு விளம்பர படுத்த கூடாது என மறுத்தவர்…..

1954 முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது திரு இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் பேரன் திரு பரமேஸ்வரன் அவர்களை இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆக்கி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு ஆலயங்களில் பரிவட்டம் கட்ட வைத்த சமூக சீர்திருத்தவாதி…

1956 பெரியார் சிங்கப்பூர் செல்ல அனுமதி கடிதம் கிடைக்கவில்லை . காலை 7 மணிக்கு கப்பல் . இரவு பத்து மணிக்கு முன்னாள் அமைச்சர் திரு ராஜாராம் அவர்கள் காமராஜரை சந்தித்து அனுமதி கோருகிறார்.
காலை பத்து மணிக்கு அலுவலகம் திறந்தவுடன் ஏற்பாடு செய்து தாரேன் என்கிறார்.

ஐயா காலை ஏழு மணிக்கு கப்பல் என்கிறார் ராஜாராம். அதனால் என்ன போயிட்டு காலையில் வாங்க நாமே அரசு விதியை மீறலாமா என்று அனுப்பி விடுகிறார். பெருந்தலைவர் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்ற நம்பிக்கையில் செல்கிறார்.

உதவியாளரிடம் ரஜிலா கப்பல் தம்பி மரைக்காயருக்கு போன போடுனு சொன்னவர் அவரிடம் நம்ம பெரியார் சிங்கப்பூர் நாளைக்கு உங்கள் கப்பல்ல வருகிறார் அனுமதி கிடைக்க 12 மணியாகும் நீங்கள் நாளைக்கு 2 மணிக்கு கப்பல எடுங்க என்று வேண்டி பெரியார் அவர்களை அனுப்பி வைத்த பெரிய மனிதர்….

சைதாப்பேட்டை சலவைத் தொழிலாளி சுதந்திர போராட்ட தியாகி தன் மகனுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கேட்டு விண்ணப்பிக்கிறார். இதை தெரிந்த காமராஜர் கல்லூரி முதல்வரிடம் அப்பனும் சலவை தொழிலாளி அண்ணனும் சலவை தொழிலாளி இந்த பையனையாவது ஊர் வேறுமாதிரி கூப்பிடட்டும் எப்படியோ ஒரு சீட் கொடுங்கள் என்ற கதர் சட்டையில் வாழ்ந்த பெரியார்….

திருமதி டி.என். அனந்தநாயகி அவர்கள் ஒருமுறை சட்டமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு திரு அண்ணாதுரை அவர்களுக்கு பிள்ளை இல்லை என்று சுட்டிக் காட்ட , திரு காமராஜர் அவர்கள் கோபபட்டு உனக்கு மூளையிருக்கான்னே , அண்ணா பெருந்தன்மையுடன் இருப்பார் ஆனால் அவர் மனைவி கேட்டா வருத்தப்படமாட்டாரா ? இந்த சபையில் எத்தனை பேர் பிள்ளை இல்லாமல் இருப்பார்கள், அவர்கள் மனம் என்ன பாடுபடும் , ஒரு பெண் இப்படி பேசலாமா என கடிந்த மாற்றாந் தோட்டத்தின் மல்லிகைக்கும் மணமுண்டு என்று வாழ்ந்த காங்கிரஸின் அண்ணாதுரை ….

தோழர் ஜீவா வறுமையில் வாடியதை அறிந்து அவர் மனைவிக்கு சமூக நலத்துறையில் அரசுப்பணியை அவருக்கே தெரியாமல் வழங்கினார்.
ஜீவா அவர்கள் இறக்கும் போது தனது உதவியாளர் திரு காந்திராமனிடம் சொன்ன வார்த்தை ” காமராஜருக்கு போன் பண்ணு ” . கருப்பு உருவத்தில் வாழ்ந்த சிகப்பு ( கம்னியூஷ்ட்) அவர்…

பிள்ளை இல்லாதவர்

பிறர் பிள்ளைகளுக்கு

மதிய உணவு திட்டம் வழங்க

மடிப்பிச்சை எடுத்தவர்….

மூன்றுமுறை முதல்வராக

இருந்தவர் இறந்தபோது

இருப்புத் தொகை

படுக்கையில் பத்து ரூபாய்..

இன்று

ஆளும் கட்சிகளும்

ஆரம்பமாகும் கட்சிகளும்

காரணம் சொல்வது

“காமராஜர் ஆட்சி அமைக்க”
பா.திருநாகலிங்க பாண்டியன்

மதுரை.

News

Read Previous

துபாய் ஆட்சியாளருக்கு இன்று பிறந்த நாள்

Read Next

நயம்படப் பேசு!

Leave a Reply

Your email address will not be published.