துபாய் ஆட்சியாளருக்கு இன்று பிறந்த நாள்

Vinkmag ad
துபாய் ஆட்சியாளருக்கு
இன்று பிறந்த நாள்
 
 
துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் (வயது 69) கடந்த 1949 வது ஆண்டு ஜூலை 15 ந் தேதி அரபு பழங்குடி மக்களின் தலைவராக இருந்த ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூமின் 4 வது மகனாக பிறந்தார்.
இவருடைய தாயாரின் பெயர் ஷேக் லத்திபா பின் ஹம்தான் அல் நஹ்யான். இவர் அபுதாபியின் முன்னாள் ஆட்சியாளரான ஹம்தான் பின் ஜாயித் பின் கலீபா அல் நஹ்யானின் மகளாவார்.
இவர் தனது 4 வது வயதில் அரபி மொழிப்பாடம் மற்றும் இஸ்லாமிய வகுப்புகளை படித்தார். அதன்பிறகு துபாய் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வியை நிறைவு செய்தார். அதன் பிறகு இங்கிலாந்து நாடு சென்று அங்கு ஆங்கில பாடத்தில் பட்டம் பெற்றார்.
படித்து முடித்ததும் விமானம் ஓட்டும் பயிற்சிக்காக இத்தாலி சென்றார்.
அதன்பிறகு நாடு திரும்பிய அவர் அமீரகம் திரும்பியதும் அமீரக நாடுகளை ஒன்றிணைக்கும் பணியில் இருந்த முன்னள் அதிபர் மறைந்த மேதகு ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யானை சந்தித்து ஐக்கிய அரபு அமீரக நாடுகளை உருவாக்கும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதுவரை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த அமீரகம் 1968 வது ஆண்டில் அனைத்து உடன்படிக்கைகளையும் திரும்ப பெற்று நாட்டை விடுவித்தது.
அதன்பிறகே 1971 வது ஆண்டு டிசம்பர் 2 ந் தேதி அமீரகம் உருவாக்கப்பட்டது
அந்த நேரம் அவரது தந்தை ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூம் இவரை ராணுவ பயிற்சிக்கு அனுப்பினார். அதன் பிறகு துபாய் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ்துறையின் தலைவராக பொறுப்பேற்றார்.
அதன்பிறகு பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டார். தனக்கென சொந்தமாக நிறுவனங்களை உருவாக்கினார். பலருக்கும் அதில் வேலைவாய்ப்பு அளித்தார்.
கடந்த 2004 வது ஆண்டு ஏப்ரல் 10 ந் தேதி ஜோர்டான் நாட்டு மன்னரின் மகளான ஹயா பிந்த் அல் ஹுசைனை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஷேக்கா அல் ஜலீலா (வயது 11) என்ற மகளும் மற்றும் ஷேக் ஜாயித் (வயது 6) என்ற மகனும் உள்ளனர்.
பிறகு கடந்த 2006 வது ஆண்டு ஜனவரி 4 ந் தேதி முதல் துபாய் ஆட்சியாளராக பொறுப்பேற்று சிறப்புடன் ஆட்சி செய்து வருகிறார்.
இதுவரை சமூக வலைத்தளங்களில் 92 லட்சத்து 30 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

News

Read Previous

‘அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்.

Read Next

பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்களின் பிறந்த நாள் நினைவலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *