தமிழ் மொழியைப் பேணுவோம்..

Vinkmag ad
எப்படியெல்லாம் தமிழானது சமஸ்கிருதத்துக்கு மாறியிருக்கிறது!
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி
குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
படையலை நைவய்தியமாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பிள்ளைப் பேறை பிரசவமாக்கி
பிணத்தை சவமாக்கி
மக்களை ஜனங்களாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
பிறந்தநாளை ஜெயந்தியாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
அறிவைப் புத்தியாக்கி
ஆசானைக் குருவாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
அவையை சபையாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
இசையை சங்கீதமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
ஆடலை நடனமாக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
அழகை சுந்தராக்கி
முகத்தை வதனமாக்கி
முடியை கேசமாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
உண்மையை சத்தியமாக்கி
நல்லதை புண்ணியமாக்கி
கெட்டதை பாவமாக்கி
கொடையை தர்மமாக்கி
அமிழ்தை  அமிர்தமாக்கி
நஞ்சை விஷமாக்கி
சான்றை ஆதாரமாக்கி
பெரியதை மஹாவாக்கி
செருப்பை பாதரட்ஷையாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
உலகத்தை லோகமாக்கி…
எப்படி எப்படி
அழகு
தமிழ்ச் சொற்கள்
அழிந்துள்ளன.
தமிழ் மொழியைப் பேணுவோம்..
முடிந்த வரை மேற்கண்ட தமிழ் (வார்த்தைகளை)சொற்களையே பயன்படுத்துவோம்

News

Read Previous

நன்றி சொல்வேன் நாயகமே

Read Next

வாழ்க்கை வாழ்வதற்கே

Leave a Reply

Your email address will not be published.