நன்றி சொல்வேன் நாயகமே

Vinkmag ad

நன்றி சொல்வேன் நாயகமே
———————————————

நாயகமே நபி நாயகமே.
நன்றி சொல்வேன் நாயகமே

நானிலத்தைப் பண்படுத்தி
நன்மைகள் பல அதில் விளைத்து
நாயகனின் மனம் குளிர
நாளெல்லாம் உழைத்தவரே

நாயகமே நபி நாயகமே.
நன்றி சொல்வேன் நாயகமே

தீயோரையும் அரவணைத்து
தீண்டாமை தனை ஒழித்து
தீன் குலத்தை ஒன்றிணைத்து
திக்கெட்டும் ஆட்சி செய்த

நாயகமே நபி நாயகமே
நன்றி சொல்வேன் நாயகமே

அரபுலகில் விதையாய் விழுந்து அகிலமெல்லாம் விருட்சம் தந்த அல்லாஹ்வின் அருள் மறையை
அன்றாடம் போற்றி வாழ்ந்த

நாயகமே நபி நாயகமே.
நன்றி சொல்வேன் நாயகமே

பெண்குலத்தின் பெருமைதனை
பெற்றோரின் அருமைதனை
உற்றார் உறவின்
ஒற்றுமையை
உலகமெல்லாம் ஓங்கச் செய்த

நாயகமே நபி நாயகமே.
நன்றி சொல்வேன் நாயகமே

கல்பினில் இறையச்சம் கொண்டு
கஷ்டங்களை சுமந்து வாழ்ந்து
கருணை வாழ்வை உலகளித்து
கடமைகளை நிறைவாய் செய்த

நாயகமே நபி நாயகமே
நன்றி சொல்வேன் நாயகமே
கவின் முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

எச்சரிக்கைப் பதிவு

Read Next

தமிழ் மொழியைப் பேணுவோம்..

Leave a Reply

Your email address will not be published.