இரட்டை சொற்கள்!

Vinkmag ad
இரட்டை சொற்கள்!
குண்டக்க மண்டக்க :
🔸குண்டக்க : இடுப்புப்பகுதி
🔸மண்டக்க: தலைப் பகுதி
பொருள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் மாறி இருப்பது
அந்தி, சந்தி:
🔸அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது
🔸சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது
அக்குவேர்,ஆணிவேர்:
🔸அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்
🔸ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்
அரை குறை:
🔸 அரை : ஒரு பொருளின் சரி பாதி
🔸குறை : அரையில்பாதி
அக்கம், பக்கம்:
🔸 அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடம்
🔸 பக்கம்: பக்கத்தில் உள்ளவீடு, பக்கத்தில் உள்ள இடம்
 காரம் சாரம் :
🔸காரம் : உறைப்பு சுவை
🔸சாரம்: புளிப்பு சுவை
இசகு பிசகு:
🔸 இசகு: தெரிந்து  ஏமாறுதல்
🔸 பிசகு: அறியாமையால் ஏமாறுதல்
 இடக்கு முடக்கு:
🔸 இடக்கு : கேளியாக இகழ்ந்து பேசுதல்
🔸 முடக்கு : கடுமையாக எதிர்த்து பேசுதல்
ஆட்டம் பாட்டம் :
🔸 ஆட்டம் : தாளத்திற்கு ஏற்ப ஆடுதல்
🔸பாட்டம் : ஆட்டத்திற்கு பொருத்தமற்று பாடுவதல்
அலுப்பு சலிப்பு :
🔸அலுப்பு: உடல்வலி
🔸சலிப்பு: உளசோர்வு
தோட்டம் துரவு
🔸தோட்டம் : செடி, கொடி கீரை பயிரிடப்படும் இடம்
🔸துரவு: கிணறு
காடு கரை :
🔸 காடு : மேட்டு நிலம் (முல்லை)
🔸 கரை : வயல் நிலம் ( மருதம், நன்செய், புன்செய்)
காடும் கழனியும்:
🔸 காடு : காடு
🔸 கழனி: வயல்(மருதம் )
நத்தம் புறம்போக்கு :
🔸 நத்தம் : ஊர் பொது மந்தை
🔸 புறம்போக்கு : ஆடு, மாடு மேயும்  நிலம்
 பழக்கம் வழக்கம் :
🔸 பழக்கம் : ஒரே செயலை பல காலமாக செய்வது
🔸 வழக்கம்: ஒரு செயலை (மரபு ) கடைப்பிடிப்பது
சத்திரம் சாவடி :
🔸சத்திரம் : அன்னமிடும் இடம் ( விடுதி )
🔸சாவடி: தங்கும் இடம்
நொண்டி முடம் :
🔸நொண்டி : கால் குறையாக இருப்பவர்
🔸முடம் : கை, கால் செயலற்று இருப்பவர்
பற்று பாசம் :
🔸 பற்று : நெருக்கமாக உறவு
🔸 பாசம் : பிரிவற்று சேர்ந்து இருப்பது
ஏட்டிக்கு போட்டி :
ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்கை ( ஏடம் : விருப்பம்)
போட்டி :விருப்பத்திற்கு எதிரானது
கிண்டலும் கேலியும்:
🔸கிண்டல் : மறைத்த செய்தியை பெறுவது
🔸கேலி : எள்ளி நகைப்பது
ஒட்டு உறவு :
🔸ஒட்டு : இரத்த பந்தம் உடையவர்கள்
🔸உறவு :  இன பந்தம்
 பட்டி தொட்டி :
🔸பட்டி: கால்நடைகள் (ஆடு, மாடு) அடைக்கும் இடம் (ஊர்)
🔸தொட்டி : பராமரிக்கும் இடம்
கடை கண்ணி :
🔸கடை: தனியாக உள்ள வணிக நிலையம்
🔸கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள்,கடை வீதிகள்
பேரும் புகழும் :
🔸பேர் : வாழும் காலத்து பெருமை
🔸புகழ்: மாணடபின் நிலைக்கும் பெருமை
நேரம் காலம் :
🔸செயல் தொடங்குதல்
🔸காலம் : பருவங்களை கணக்கிடுதல்
பழி பாவம் :
🔸பழி: பிறரால் உண்டாகும்  இழிவு
🔸பாவம் : தீச்செயல் நிகழ்வு
கூச்சல் குழப்பம்:
🔸கூச்சல் : துன்ப ஒலி (கூ – கூவுதல்)
🔸குழப்பம்: உண்மையறியாது வெளிப்படும் சத்தம்
நகை நட்டு :
🔸நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்)
🔸நட்டு : சிறிய அணிகலன்கள்
பங்கு பாகம்:
🔸பங்கு: அசையும் சொத்து
🔸பாகம் : அசையா சொத்து
வாட்டம் சாட்டம் :
🔸வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்
🔸 சாட்டம் : தோற்றப் பொலிவு
காய் கறி :
🔸காய்: காய்களின் வகைகள்
🔸கறி: கிழங்கு வகைகள்
ஈவு இரக்கம் :
🔸ஈவு : (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்
🔸இரக்கம் : பிற உயிர்களிடம் அன்பு காட்டுதல்
பொய்யும் புரட்டும்:
🔸பொய்: உண்மையில்லாததை கூறுவது
🔸புரட்டு :  பொய்யை உண்மை யென கூறி நடிப்பது
சூடு சொரணை:
🔸 சூடு : தகாதசெயல், சொல்லால் உண்டாகும் மனகொதிப்பு
🔸 சொரணை:  தன்உணர்வு

News

Read Previous

பொங்கல் வாழ்த்துக்கள்

Read Next

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.