அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை வேண்டவே வேண்டாம்

Vinkmag ad

அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை வேண்டவே வேண்டாம்.

அப்துல் கலாமுக்கு சிலை வைப்பதாக தொலைபேசி மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும் அறிந்தோம். அப்துல் கலாம் அவர்கள் சிலை வைப்பதை வெறுத்து மட்டும் அல்லாமல், அதை மற்றவர்களிடமும் தொடர்ந்து தெரிவித்து வந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

முகம்மது நபி அவர்கள் தனக்கு சிலை வைப்பதையும், சித்திரம் வைப்பதையும், புகழ்ந்து பேசப் படுவதையும் ஹராம் (தடுக்கப் பட்டவை – Haram) என்று எச்சரித்து உள்ளார்கள்.. அமெரிக்க வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் முகம்மது நபிக்கு சிலை வைத்த பொழுது முஸ்லிம் உலகமே எதிர்ப்புத் தெரிவித்ததை நாம் அறிவோம். எதிர்ப்பின் காரணமாக சிலையும் அகற்றப்ப் பட்டது. 5 நேரமும் தவறாமல் தொழுது வந்த அப்துல் கலாம் எப்படி தனக்கு சிலை வைப்பதை விரும்புவார்கள் என்பதை நினைத்துப் பார்த்து நடந்து கொள்வோம்.

இப்படி இருக்க, அப்படி இருக்க சிலை வைப்பது அப்துல் கலாமை அவர்களை அவமானப் படுத்துவதாகதான் இருக்க முடியும்.  மேலும் இச் செயல் முஸ்லீம்களின் மனதையும் புண் படுத்தும் செயலாகும்.

அதற்குப் பதில், கலாம் அவர்கள் சொல்லியபடி பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு கழிவறை கட்டி கொடுங்கள். அல்லது அப்துல் கலாம் சொல்லிய அறிவுரைகளை மாணவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குங்கள்.

எனவே தயவு செய்து சிலை வைக்கும் முயற்சியை நிறுத்த தாழ்மையாய் கேட்டுக் கொள்கிறோம்.

ஐதராபாத்தில் ஏற்கனவே ஒரு சிலை வைத்து விட்டார்கள். ராமேஸ்வரத்தில் ஒரு சிலை உருவாகி வருகிறது. மேலும் அதிகமான சிலைகள் வர வாய்ப்புக்கள் இருப்பதால் உடனே கீழே கொடுக்கப் பட்ட முகவரிக்கு, சிலை வைப்பது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். சிலைகள் வைத்த பிறகு அதை எடுப்பது மிகவும் கடினமான காரியம். ஒரு வேலை எடுக்க முடியாமல் கூட போய்விடும். எனெவே உடனே செயல் படுங்கள்.

அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை செய்ய வேண்டாம் என்று, அப்துல் கலாம் சகோதரர்க்கு  கீழ் கண்ட முகவரிக்கு கடிதம் எழுதுங்கள். அவர்கள் சம்பத்தப்பட்ட மாநில, மத்திய அரசிடம் வேண்டுகோள் வைப்பார்கள்.

Mohammed Muthu Meera Lebbai Maraicker.

Pallivasal Street

Rameshwaram 623526

 

 

—-

 

ejournalist222@gmail.com

 

News

Read Previous

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து!

Read Next

சுதந்திரம் எங்கே?

Leave a Reply

Your email address will not be published.